இரண்டு கைகளும் இல்லாமல் விமானம் ஓட்டும் ஜெஸிக்கா காக்ஸ்...!!

Written By:

வாழ்க்கையில் கைகள் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்; ஆனால், தன்னம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது என்ற வாசகங்களுக்கு ஓர் உண்மையான முன்மாதிரி ஜெஸிக்கா காக்ஸ்.

கைகள் இல்லாத உலகின் முதல் பைலட் என்ற பெருமைக்குரியவர் ஜெஸிக்கா காக்ஸ். பிறவியிலேயே கைகள் இல்லாமல் பிறந்த இவர் செய்கைகள் பலருக்கு கைகள் இருந்தும் தன்னம்பிக்கை இல்லாதவர்களை தட்டி எழுப்பிவிடும். ஸ்லைடரில் இவரின் சாதனைகளை பார்க்கலாம்.

 அமெரிக்க பெண்மணி

அமெரிக்க பெண்மணி

1983ம் ஆண்டு அமெரிக்காவின் அரிஸோனாவில் பிறந்தவர். பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார். ஆனாலும், தனது விடாமுயற்சியால் இன்று பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

பைலட் லைசென்ஸ்

பைலட் லைசென்ஸ்

உலகிலேயே கைகள் இல்லாமல் விமானம் ஓட்டுவதற்கான பைலட் லைசென்ஸ் பெற்ற முதல் நபர் இவர்தான். கடந்த 2008ம் ஆண்டு சிறிய ரக விமானத்தை ஓட்டுவதற்கான பைலட் லைசென்ஸை பெற்றார்.

கால்கள்தான் இவருக்கு கைகள்

கால்கள்தான் இவருக்கு கைகள்

கைகள் இல்லையே என்று சோர்ந்துபோய்விடாமல், கைகளால் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இவர் கால்களாலேயே செய்யத் துவங்கினார். கார் ஓட்டுவது முதல் கம்ப்யூட்டர் இயக்குவது வரை அனைத்து பணிகளையும் கால்களாலேயே செய்கிறார். அதாவது, காரில் இவருக்காக எந்த மாறுதல்களும் செய்யாமல், ஓட்டக்கூடிய லைசென்ஸ் பெற்றிருக்கிறார்.

 கம்ப்யூட்டர் டைப்பிங்

கம்ப்யூட்டர் டைப்பிங்

கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளை கால்களால் தட்டச்சு செய்கிறார்.

பிளாக் பெல்ட்

பிளாக் பெல்ட்

கராத்தேயிலும் கைதேர்ந்தவர் ஜெஸிக்கா. கைகள் இல்லாமல் கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்ற முதல் மனிதரும் இவர்தான் என்பது குறி்ப்பிடத்தக்கது. அதுவும் 2 பிளாக் பெல்ட்டுகளை பெற்றிருக்கிறார்.

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

கராத்தே மட்டுமில்லை, ஸ்கூபா டைவிங், நீச்சல் என எந்த துறையிலும் அசத்துகிறார்.

 பியானோ பிரியர்

பியானோ பிரியர்

பியானோ வாசிப்பதிலும் இவர் ஆர்வம் காட்டுகிறார். மொத்தத்தில் இவர் கால் படாத இடமே இல்லை. தலைவாருதல், மொபைல்போன் அழைப்புகள் என அனைத்தையும் கால்களாலேயே செய்து அசத்துகிறார்.

ஊக்குவித்தல் முயற்சி

ஊக்குவித்தல் முயற்சி

இவை எல்லாவற்றையும் தவிர்த்து இவர் மிகச்சிறந்த பேச்சாளர். பிறருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இதுவரை 20 நாடுகளுக்கு சென்று தனது நிகழ்ச்சிகள் மூலம் ஆயிரக்கணக்கானோரை ஊக்குப்படுத்துவதோடு அவர்களுக்கு, முன்மாதிரியாகவும் திகழ்கிறார் ஜெஸிக்கா.

 கைகள் இருந்தும்...

கைகள் இருந்தும்...

இரண்டு கைகள் இருந்தும் இன்று தன்னம்பிக்கை இல்லாத பலருக்கு ஜெஸிக்கா காக்ஸ் மூலம் புதிய உத்வேகத்தை பெற முடியும்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Born without arms, Jessica Cox flies planes and drives cars with her feet and is the first person sans arms to be an ATA black belt. She is a motivational speaker.
Story first published: Thursday, May 28, 2015, 11:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark