கமல் ட்வீட் எதிரொலி: லஞ்சம் தர மறுத்து புதிய ஸ்கூட்டரை ஆர்டிஓ-விடமே ஒப்படைத்த உரிமையாளர்..!!

கமல் ட்வீட் எதிரொலி: லஞ்சம் தர மறுத்து புதிய ஸ்கூட்டரை ஆர்டிஓ-விடமே ஒப்படைத்த உரிமையாளர்..!!

By Azhagar

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம் கேட்டதாக கூறி, புதியதாக வாங்கிய ஸ்கூட்டரை ஆர்.டி.ஓ அலுவலகத்திலே ஒப்படைத்து சென்றார் திருப்பூரை சேர்ந்த நாகராஜ்.

ஸ்கூட்டரை பதிவு லஞ்சம் தர மறுத்த உரிமையாளர்..!!

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த ஜூன் 30ம் தேதி புதியதாக ஸ்கூட்டர் வாங்கி இருந்தார்.

ஸ்கூட்டரை பதிவு லஞ்சம் தர மறுத்த உரிமையாளர்..!!

அன்றைய நாளில் ஸ்கூட்டர் பதிவு செய்யப்படாமல் இருப்பதை பார்த்த நாகராஜ், தனது டீலரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.

கேள்விக்கு பதிலளித்த டீலர், ஜூலை 1ம் தேதி நாகராஜின் ஸ்கூட்டர் பதிவு செய்யப்படும் என பதிலளித்து விட்டு சென்றார்.

Recommended Video

Tata Nexon: Tata's New SUV (Nexon) For India | First Look - DriveSpark
ஸ்கூட்டரை பதிவு லஞ்சம் தர மறுத்த உரிமையாளர்..!!

ஆனால் டீலர் கூறியது போல ஸ்கூட்டர் அடுத்த நாளில் பதிவு செய்யப்படவில்லை. இதனால் நாகராஜ் சென்று டீலரை சந்தித்த போது, வாகனத்தை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக கூறினார்.

ஸ்கூட்டரை பதிவு லஞ்சம் தர மறுத்த உரிமையாளர்..!!

இதற்காக கூடுதலாக பணம் தரவேண்டும் என நாகராஜிடம் டீலர் நிர்பந்தித்துள்ளார். இதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

மேலும் நாகராஜ் திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதனிடம் தனது வாகனம் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கான புகாரை அளித்தார்

ஸ்கூட்டரை பதிவு லஞ்சம் தர மறுத்த உரிமையாளர்..!!

புகார் தெரிவித்து ஒரு மாத முடிவடையும் நிலையில், அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எடுக்கப்படவில்லை.

ஸ்கூட்டரை பதிவு லஞ்சம் தர மறுத்த உரிமையாளர்..!!

லஞ்சம் கொடுத்து ஸ்கூட்டரை பதிவு செய்ய மனமில்லாத நாகராஜ், வேறு வழியின்றி கடந்த 25ம் தேதி "ஆர்டிஓவிற்கு லஞ்சம் தர பணம் இல்லாததால் வாகனத்தை அவரிடமே அளிப்பதாக" கூறி போர்டு மாட்டினார்

ஸ்கூட்டரை பதிவு லஞ்சம் தர மறுத்த உரிமையாளர்..!!

பிறகு தனது ஸ்கூட்டரை திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்கூட்டரை பதிவு லஞ்சம் தர மறுத்த உரிமையாளர்..!!

நாகராஜின் இந்த செயலால் ஸ்தம்பித்த ஆர்.டி.ஓ அலுவலர்கள், இதுபோன்ற காரணங்களுக்காக வாகனங்களை திரும்ப பெற முடியாது என்று கூறி, ஸ்கூட்டரை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

ஸ்கூட்டரை பதிவு லஞ்சம் தர மறுத்த உரிமையாளர்..!!

இருந்தாலும் ஸ்கூட்டரை ஆர்.டி.ஓ-விடம் ஒப்படைப்பதில் உறுதியாக இருந்த அவரைப் பார்த்த ஆர்.டி.ஓ சிவகுருநாதன், நாகராஜுக்கும், வாகன விற்பனை‌யகத்திற்கும் சம்மன் அளித்துள்ளார்.

ஸ்கூட்டரை பதிவு லஞ்சம் தர மறுத்த உரிமையாளர்..!!

தமிழக அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பாதிக்கப்படுவோர் அதை வெளியே கொண்டு வரவேண்டும் என சமீபத்தில் நடிகர் கமல் ஹாசன் ட்வீட்டீயிருந்தார்.

ஸ்கூட்டரை பதிவு லஞ்சம் தர மறுத்த உரிமையாளர்..!!

தற்போது திருப்பூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் லஞ்சத்தால் நடைபெறும் முறைகேடுகளை வெளியே கொண்டுவருமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Man Leaves New Scooter At RTO office Not Able to Pay Bride. Click for details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X