எலக்ட்ரிக் ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ள நியூயார்க் போலீஸ்!! 1 இல்ல, 2 இல்ல... மொத்தம் 184 கார்களாம்

அமெரிக்க, நியூயார்க் போலீஸ் துறையினர் தங்களது ரோந்து மற்றும் அலுவலக பணிகளுக்காக சுமார் 184 ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

எலக்ட்ரிக் ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ள நியூயார்க் போலீஸ்!! 1 இல்ல, 2 இல்ல... மொத்தம் 184 கார்களாம்

உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் கடந்த சில வருடங்களாக மேற்கொண்டுவரும் தொடர் முயற்சிகளே முக்கிய காரணமாகும். இந்தியாவிலும் ஒன்றிய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்கள் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியங்களையும் சலுகைகளையும் வழங்கி வருகின்றன.

எலக்ட்ரிக் ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ள நியூயார்க் போலீஸ்!! 1 இல்ல, 2 இல்ல... மொத்தம் 184 கார்களாம்

அதுமட்டுமின்றி இவி பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அலுவலக வாகனங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. சார்ஜிங் நிலைய கட்டமைப்புகளின் பற்றாக்குறையால், அரசு அதிகாரிகளுக்கு எலக்ட்ரிக் கார்களை வழங்கும் முயற்சி நமது நாட்டில் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை என்றாலும், மேலை நாடுகளில் எப்போதோ துவங்கப்பட்டுவிட்டன.

எலக்ட்ரிக் ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ள நியூயார்க் போலீஸ்!! 1 இல்ல, 2 இல்ல... மொத்தம் 184 கார்களாம்

இதற்கு சாட்சியாக, வெளிநாட்டு போலீஸார் வாங்கிய எலக்ட்ரிக் கார்களை பற்றி நமது செய்தியில் பார்த்துள்ளோம். இதில் பெரும்பாலானவை டெஸ்லா எலக்ட்ரிக் கார்களாகவே இருக்கும். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் மாநகர போலீஸார் தங்களது பயன்பாட்டிற்காக 184 ஃபோர்டு மஸ்டங் மாக்-இ எஸ்யூவி கார்களை ஆர்டர் செய்துள்ளனர்.

எலக்ட்ரிக் ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ள நியூயார்க் போலீஸ்!! 1 இல்ல, 2 இல்ல... மொத்தம் 184 கார்களாம்

நியூயார்க் காவல்துறை, ஷெரிப் அலுவலகம் மற்றும் பூங்காக்கள் & பொழுதுபோக்குத் துறை போன்ற மாநில துறைகள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்களின் அலுவலக வாகனங்களை மின்மயமானதாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ள இந்த 184 ஃபோர்டு மஸ்டங் மாக்-இ கார்களும் 2022 ஜூன் 30க்குள் டெலிவிரி செய்யப்படும் என கூறப்படுகிறது.

எலக்ட்ரிக் ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ள நியூயார்க் போலீஸ்!! 1 இல்ல, 2 இல்ல... மொத்தம் 184 கார்களாம்

இதுகுறித்து நியூயார்ச் சிட்டிவைட் நிர்வாக சேவைகள் துறையின் செயல் ஆணையர் டான் எம்.பின்னாக் கருத்து தெரிவிக்கையில், "இத்தகைய மின்மயமாக்கலில் புத்திசாலித்தனமான முதலீடுகள் நியூயார்க் நகரம் புதைபடிவ எரிபொருள்களை சார்ந்திருப்பதை முறியடிக்க உதவும்" என்றார். ஃபோர்டு அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் தான்.

எலக்ட்ரிக் ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ள நியூயார்க் போலீஸ்!! 1 இல்ல, 2 இல்ல... மொத்தம் 184 கார்களாம்

அதேபோல் டெஸ்லாவும் அமெரிக்காவில் தோன்றியதே. இருப்பினும் இவை இரண்டின் எலக்ட்ரிக் கார்களில் டெஸ்லா நிறுவனத்துடையதே உலகளவில் பிரபலமானவைகளாக உள்ளன. நியூயார்க்கிலும் டெஸ்லா கார்களுக்கு பஞ்சமில்லை. நியூயார்க் அரசு பல்வேறு பயன்பாடுகளுக்காக டெஸ்லா உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் செடான் கார்களுக்கான அனுமதி இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.

எலக்ட்ரிக் ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ள நியூயார்க் போலீஸ்!! 1 இல்ல, 2 இல்ல... மொத்தம் 184 கார்களாம்

மொத்தம் 250 டெஸ்லா கார்கள் நியூயார்க் போலீஸ் துறைக்காக ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் சட்ட அமலாக்க துறையினரால் ஃபோர்டு மஸ்டங் மாக்-இ கார்கள் அந்த நாட்டில் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. முன்னதாக இந்த 2021 டிசம்பர் மாத துவக்கத்தில் அமெரிக்காவில் மிச்சிகன் மாநில போலீஸாரின் ரோந்து வாகனங்களில் இந்த எலக்ட்ரிக் ஃபோர்டு எஸ்யூவி கார் இணைக்கப்பட்டது.

எலக்ட்ரிக் ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ள நியூயார்க் போலீஸ்!! 1 இல்ல, 2 இல்ல... மொத்தம் 184 கார்களாம்

அமெரிக்காவில் ஜோ பைடனின் நிர்வாகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அரசாங்க ஊழியர்களின் அலுவலக வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்படுவது இதனை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. மிச்சிகன் மாநிலத்தில் போலீஸாரின் பயன்பாட்டிற்கு வந்திருப்பது ஃபோர்டு மஸ்டாங் மாக்-இ காரின் ஜிடி வெர்சனாகும்.

எலக்ட்ரிக் ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ள நியூயார்க் போலீஸ்!! 1 இல்ல, 2 இல்ல... மொத்தம் 184 கார்களாம்

இதில் இரட்டை-மோட்டார் அனைத்து-சக்கர-ட்ரைவ் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது. இவ்வாறு போலீஸாரின் போக்குவரத்திற்காக எலக்ட்ரிக் கார்கள் அதிகளவில் வாங்கப்படுவதினாலும், இவி பயன்பாட்டை மேலும் ஊக்கப்படுத்தும் வகையிலான அமெரிக்க அதிபரின் சமீபத்திய உத்தரவினாலும், அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காகவே ஃபோர்டு நிறுவனம் சில இவி-களை வடிவமைக்க துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் ஃபோர்டு மஸ்டங் கார்களை ஆர்டர் செய்துள்ள நியூயார்க் போலீஸ்!! 1 இல்ல, 2 இல்ல... மொத்தம் 184 கார்களாம்

ஆனால் இந்தியாவில் இருந்துதான் ஃபோர்டு அதிரடியாக வெளியிருவதாக இந்த 2021ஆம் ஆண்டில் அறிவித்தது. போதிய கார்கள் விற்பனையின்மையால் கொண்டுவரப்பட்ட இந்த அறிவிப்பின்படி இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்த 2 தொழிற்சாலைகளில் வாகன தயாரிப்பு பணிகள் கிட்டத்தட்ட முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டன. இதில் பழமையான சென்னை ஃபோர்டு தொழிற்சாலையும் ஒன்றாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New york police department orders 184 ford mustang mach e police cars
Story first published: Friday, December 31, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X