டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

ரெனால்ட் க்விட் காரில் 19,000 கிமீ ‘நான் ஸ்டாப் பயணம்’ நடத்தியுள்ளனர் டெல்லியைச் சேர்ந்த குழுவினர். அது குறித்த ஸ்வாரஸ்யமான தகவல்களை காணலாம்.

By Arun

டெல்லி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வரை சாலை மார்க்கமாக ஒரு 'நான் ஸ்டாப்' பயணம், அதுவும் ஒரு சிறிய க்விட் காரில் என்றால் யாருக்கும் மலைப்பாகத்தான் இருக்கும். இவ்வளவு பெரிய நிகழ்வு சாத்தியமா எனக்கூட தோன்றலாம். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவான ஒரு கார், இதனை சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறது.

டெல்லி டூ பாரிஸ்: அசால்ட்டாக கடந்த ரெனால்ட் க்விட்!

ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காரான ரெனால்ட் க்விட், இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகிறது. இந்திய சாலை தரத்திற்கு ஏற்றவகையில் இதனுடைய வடிவமைப்பு உள்ளது. ஆனால் கடும் குளிர் பிரதேசங்களிலும், பிற கால நிலையையும் இதன் சிறிய எஞ்சின் தாக்குப்பிடிக்குமா என்பதனை ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளத் தீர்மானித்தனர் டெல்லியைச் சேர்ந்த ஐவர் குழுவினர்.

 டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

இதற்காக இவர்கள் தேர்ந்தெடுத்தது 16,000 கிமீ தொலைவில் உள்ள ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரமாகும். சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகள் வழியான மிக நீண்ட பயணம் மட்டுமல்லாது, காலநிலையிலும் ஏற்ற இறக்கங்கள், சாலை வசதிகளிலும் கடும் இன்னல்களை ‘க்விட்' சந்திக்க வேண்டி இருந்தது.

 டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

ஐவர் குழுவுடன் டெல்லியிலிருந்து பாரிஸ் கிளம்பிய ‘க்விட்'டுக்கு, ஆரம்ப கட்டமே கடும் சோதனை தான், வடகிழக்கு இந்தியாவின் மிகவும் மோசமான சாலைகள் தான் இப்பயணத்தில் அச்சிறிய கார், கண்ட மிகவும் மோசமான சாலைகளாகும். ஆயினும் சாலைகள் மட்டுமே அதன் வலிமையை சோதித்து பார்க்கவில்லை.

டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

க்விட் அடுத்து சந்தித்தது மியான்மரில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளம், அதனை கடந்து சென்றபோது. சீனாவின் கடும் குளிரை சந்திக்கவேண்டியிருந்தது, குளிர் மற்றும் பணிப்பொழிவு காரணமாக சாலைகள் பணிபடர்ந்திருந்தன.

டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

இது அவ்வளவு எளிதான பயணமாக இருக்கவில்லை, இதனால் க்விட்டின் டயர்களை கழற்றிவிட்டு பணியில் செல்லும் வகையிலான டயர்களை மாற்றினர். இதன் பிறகு கிர்கிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வழியாக மிகவும் சீராக பயணித்தது க்விட்.

டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

மலை முகடுகள், சமவெளிகள் என எப்பேர்ப்பட்ட நிலப்பரப்பிலும் மிகவும் இயல்பாக பயணித்தது, அதிகபட்ச வேகமாக இப்பயணத்தின் போது அதிகபட்சமாக மணிக்கு 174 கிமீ வேகம் வரை சென்றது க்விட்.

டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

இது பற்றி பயணத்தில் ஈடுபட்ட ஒருவரான ராகுல் காக்கர் கூறுகையில், இப்பயணத்திலேயே மிகவும் மோசமாக அமைந்த ஒரு சம்பவம், கஜகஸ்தான் நாட்டில் அரங்கேறியது என குறிப்பிட்டார்.

டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

"கஜகஸ்தானின் ஆரல்ஸ்க், எனும் ஊர் வழியாக செல்ல நேர்கையில், கால நிலை

-25 டிகிரிக்கும் கீழாக சென்றுவிட்டது. மேலும் எங்கள் பயணப் பாதையில் எந்த ஒரு எரிபொருள் நிலையமும் இல்லை". செய்வதறியாது திக்குமுக்காடியபோது, அதிர்ஷ்டவசமாக ஒரு கார் பழுதுநீக்கு மையம் தென்பட்டது.

டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

அதில் கிடைத்த சிறு அளவிலான எரிபொருளுடன் பயணத்தை தொடர்ந்து ஒருவழியாக,வெற்றிகரமாக பாரிஸில் நிறைவடைந்தது. 45 நாட்கள் நீடித்த இப்பயணம் மறக்க முடியாதது என்றும் அவர் தெரிவித்தார். சிறிய எஞ்சின் இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தியிருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் க்விட் கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. அறிமுகப்படுத்தப்பட்ட 17 மாதங்களில் 1,30,000 க்விட் கார்கள் விற்பனை ஆகியுள்ளன.

டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

இது பற்றி கருத்து தெரிவித்த ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுமித் சாஹ்னி, "க்விட் கார்கள் முற்றிலும் உள்நாட்டிலேயெ தயாரிக்கப்பட்டவை என்றார். அதன் திருகாணிகள் முதலான பாகங்கள் கூட இந்தியாவில் டிசைன் செய்யப்பட்டு, ‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டவை" என பெருமிதம் கொண்டார்.

டெல்லி டூ பாரிஸ்... அசால்ட்டாக கடந்த நம்ம ரெனோ க்விட் கார்!

க்விட் கார்கள் இந்தியாவில் பெரும் அளவில் விற்பனை ஆகிவருகின்றன. இதுமட்டுமல்லாமல் நேபாளம், இலங்கை மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து வங்காளதேசம், பூடான் மற்றும் பிரேசில் நாடுகளிலும் தொழிற்சாலை அமைத்து ‘க்விட்' தயாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக அறிமுகமாகியுள்ள ரெனால்ட் க்விட் ஏஎம்டி (ஆட்டோமேடிக்) காரின் படங்கள்:

Most Read Articles
English summary
This Make In India Small Car Was Driven 19,000 Kms From Delhi To Paris Non-Stop.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X