செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தில் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

பத்து ஆண்டுகளாக கட்டுமானப் பணியில் இருந்து வந்த உலகின் மிக நீளமான சுரங்க வழிப்பாதை 'அடல்' கடந்த 3ம் தேதியில் இருந்து பொதுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இமாச்சலத்தின் மணாலி - லடாக்கின் லே ஆகிய இருபகுதிகளையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைந்திருக்கின்றது.

செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

இவ்விரு பகுதி வாழ் மக்களின் வெகு நாள் கனவே அடல் சுரங்க வழிப்பாதை. ஆனால், இந்த சுரங்க வழிப்பாதை பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே விபத்து போன்ற கசப்பான சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. எனவே, சுரங்கப் பாதை அமைந்திருக்கும் அந்த பகுதிக்கு மட்டும் சிறப்பு விதிகள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

குறிப்பாக, வாகனங்களை அதிவேகத்தில் இயக்கியதே தற்போது வரை நடைபெற்ற விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. எனவே, சுரங்க வழிப்பாதையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் போலீஸார் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சிறப்பு கருவிகளின் உதவியுடன் வாகனங்களை வேகத்தைக் கண்கானிக்க இருக்கின்றனர்.

செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

தற்போது அதிகபட்ச வேகம் 80 கிமீ வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராத செல்லாணை போலீஸார் வழங்கி வருகின்றனர். இதுமட்டுமின்றி, குல்லு மாவட்ட போலீஸார் சில தனித்துவமான விதிகளையும் வாகன ஓட்டிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது, சுரங்கப்பாதையில் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் செல்ஃபி எடுத்தல் போன்ற செயலுக்கு தடை விதித்துள்ளனர்.

செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

தற்போது அரங்கேறிய விபத்துகள் சிலவற்றிற்கு செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்தது முக்கியமான காரணியாக அமைந்திருக்கின்றது. எனவேதான், சுரங்க வழிப் பாதை அமைந்திருக்கும் 200 மீட்டர் பகுதி இடைவெளியில் போட்டோ எடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

இந்த புதிய விதிகளுக்கான ஒப்புதலை குல்லு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரிச்சா வெர்மா வழங்கியுள்ளார். ஓவர் ஸ்பீடு, பிற வாகனங்களை முந்திச் செல்லுதல், வாகனங்களை நிறுத்துதல் ஆகியவற்றிற்கும் புதிய விதி தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றது.

செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

அதுமட்டுமின்றி, சுரங்க வழிப்பாதையில் மேலும் தொடருவதற்கு அனுமதிக்காமல், உடனடியாக அவசரகால வெளியேறும் வாயில்கள் வழியாக அவர்கள் வெளியேற்றப்படவும் இருக்கின்றனர். இதனைக் கண்கானிக்கும் வகையில் 30க்கும் அதிகமான போலீஸார் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

மணாலி-லே இடையே உள்ள பாதைகளில் நிலவும் ஆபத்தை குறைக்கும் நோக்கிலேயே அடல் சுரங்க வழிப்பாதை கட்டப்பட்டுள்ளது. ஆனால், இதனை வாகன ஓட்டிகள் தவறாக பயன்படுத்தி விபத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவேதான் அதிரடியாக புதிய உத்தரவுகள் அந்த பகுதிக்கு மட்டும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து போன்ற கசப்பான அனுபவங்களைக் குறைக்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

அடல் சுரங்க வழிப்பாதை பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்:

இந்த சுரங்கம் வழியாக பயணித்தால் ஆபத்துகளை தவிர்ப்பதோடு 46 கிமீ கூடுதல் பயணத்தையும் குறைக்க முடியும். மேலும், 5 மணி நேரங்கள் வரை மிச்சப்படுத்த முடியும். உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையாக காட்சியளிக்கும் இது சுமார் 9 கிமீ நீளம் கொண்டதாகும். கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் இது அமைந்திருக்கின்றது.

செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

இந்த சுரங்கத்தில் அனைத்து கால சீதோஷ்ன நிலைகளையும் தாங்கிக் கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இமாச்சலத்தில் நிலவும் அதிக பனி காலத்தில்கூட தங்கு தடையின்றி சுரங்கத்தைப் பயன்படுத்தும் வகையில் அது கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இதில், ஒரு நாளைக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணிக்க முடியும்.

செல்ஃபி எடுக்க தடை?.. எங்கேனு தெரியுமா?.. தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க... உஷாரா இருந்துக்கோங்க பாஸே!

தொடர்ந்து டனலில் பயணிக்கும்போது தங்கு தடையில்லாமல் இணைய வசதியைப் பெற வேண்டும் என்பதற்காக 4ஜி தொழில்நுட்பம் அடங்கிய ஆன்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், பாதுகாப்பு வசதிக்காக ஆங்காங்கே கேமிராக்கள் மற்றும் தீயணைக்கும் கருவிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, காற்றின் அளவைக் கண்கானிக்கும் கருவிகள் மற்றும் காற்றோட்டத்தை உறுதிப்படுத்தக் கூடிய கருவிகள் உள்ளிட்டவையும் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Selfie & Photography Banned In Atal Tunnel. Read In Tamil.
Story first published: Friday, October 9, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X