பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய ஷாரூக்கான்... !!

Written By:

உலகின் மிகவும் அதிவேக ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் வகை கார் மாடல் பிஎம்டபிள்யூ ஐ8. உலக அளவில் கடும் கிராக்கி கொண்ட இந்த காருக்கு இந்தியாவிலும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆம், தற்போது இந்திய பிரபலங்களின் கனவு மாடலாக உருவெடுத்துள்ளது. பிஎம்டபிள்யூ பிரியரான சச்சின் டெண்டுல்கரைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானும் இந்த காரை வாங்கியிருக்கிறார்.

டெலிவிரி

டெலிவிரி

கடந்த புதன்கிழமையன்று இந்த புதிய பிஎம்டபிள்யூ ஐ8 கார் மும்பையிலுள்ள ஷாரூக்கான் வீட்டிற்கே எடுத்து வந்து நேரடியாக டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாழ்த்து

வாழ்த்து

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மும்பை டீலரான நவ்னீத் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஷரத் கச்சாலியா ஷாரூக்கானின் வீட்டிற்கு நேரில் சென்று காரை டெலிவிரி கொடுத்ததுடன், வாழ்த்தும் தெரிவித்தார்.

ரவுண்டு

ரவுண்டு

கார் டெலிவிரி பெற்றவுடனேயே, மும்பை பந்த்ரா சாலைகளில் பிஎம்டபிள்யூ ஐ8 காரில் ரவுண்டு அடித்துள்ளார். அந்தளவுக்கு இந்த காரை ஓட்டுவதற்கு ஆர்வமாக இருந்துள்ளார்.

பாதுகாப்பு இல்லாமல்...

பாதுகாப்பு இல்லாமல்...

இதுவரை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை அதிகளவில் பயன்படுத்தி வந்திருக்கிறார் ஷாரூக்கான். ஆனால், தற்போது இந்த காரை அதிகம் பயன்படுத்த துவங்கியிருக்கிறார்.

ஆர்வ மிகுதி...

ஆர்வ மிகுதி...

பிஎம்டபிள்யூ ஐ8 காரை ஓட்டும்போதும் அவரது ஓட்டுனர் மற்றும் பாதுகாவலர்கள் அவரது மற்றொரு காரில் முன்னால் செல்ல, எந்தவொரு பாதுகாப்பு இல்லாமல் பிஎம்டபிள்யூ ஐ8 காரை ஓட்டி பார்த்திருக்கிறார்.

விலை

விலை

ரூ.2.25 கோடி எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட இந்த காரை ரூ.3.30 கோடி ஆன்ரோடு விலையில் ஷாரூக்கான் வாங்கியிருக்கிறார்.

ஃபேன்ஸி நம்பர்

ஃபேன்ஸி நம்பர்

இந்த காருக்கு மும்பையில் பதிவு செய்வதற்காக, 555 என்ற ஃபேன்ஸி நம்பரை கேட்டு பதிவு செய்திருக்கிறார்.

ஏன் ஆர்வம்

ஏன் ஆர்வம்

உலகிலேயே அதிக செயல்திறன் கொண்ட ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் பிஎம்டபிள்யூ ஐ8.ஹைபிரிட் நுட்பம் கொண்ட இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவரை பின்புற வீல்களுக்கும், எலக்ட்ரிக் மோட்டார் முன்புற சக்கரங்களுக்கும் சக்தியை கடத்தும்.

பவர்

பவர்

இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் 228 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும். எலக்ட்ரிக் மோட்டார் 129 எச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். அதிகபட்சமாக ஹைபிரிட் நுட்பத்தில் 357 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

மைலேஜ்

மைலேஜ்

ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் கணக்கீட்டின்படி, ஒரு லிட்டருக்கு 40 கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை பறக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், முன்புறம், பின்புறத்திற்கான பார்க்கிங் சென்சார்கள், நேவிகேஷன் சிஸ்டம், ஆட்டோமேட்டட் பிரேக் சிஸ்டம், ஹை பீம் அசிஸ்ட் போன்ற பல நவீன வசதிகளை கொண்டுள்ளது.

ஷாரூக் கார் கலெக்ஷன்

ஷாரூக் கார் கலெக்ஷன்

ஆடி ஏ6, ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி உள்ளிட்ட பல காஸ்ட்லி கார்களை கொண்ட நடிகர் ஷாரூக்கான் வீட்டு கராஜை தற்போது பிஎம்டபிள்யூ ஐ8 காரும் அலங்கரிக்கிறது.

 விரைவில்...

விரைவில்...

அதிசக்திவாய்ந்த கார்களை வைத்திருக்கும் மும்பை பிரபலங்கள் மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் ரவுண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், ஷாரூக்கானின் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 காரையும் விரைவில் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிட்டலாம்.

அடுத்து ஒரு ஆடம்பர பஸ் வாங்கிய ஷாரூக்கான்... விலை 3 கோடி!!698.html

அடுத்து ஒரு ஆடம்பர பஸ் வாங்கிய ஷாரூக்கான்... விலை 3 கோடி!!698.html

Images Source: Twitter 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Shah Rukh Khan Gets new BMW i8 Hybrid Sports Car.
Story first published: Monday, June 20, 2016, 11:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark