பிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்!

ஒரு படத்தில் நடித்தால் அடுத்த பட அக்ரிமென்ட்டை வைத்து ஆடி கார் வாங்க திட்டம் போட்டு திரைத்துறையில் கால் பதிக்கும் காலமிது. ஆனால், தமிழ் சினிமாத் துறையின் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டாரின் கார்களின் பட்டியலை கேட்டால் வியப்பில் ஆழ்த்துகிறது. இன்று பிறந்தநாள் காணும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் நிறைவை தொட்டுவிட்டார்.

இதுவரை அவர் தனது தனிப்பட்ட வாழ்வில், ஆடம்பரத்தை மட்டுமல்ல மிக ஆடம்பர கார்களின் பக்கம் கூட திரும்பவில்லை என்பது அவரது கார்களின் பட்டியலை பார்த்தாலே புரியும். திரைத் துறை தாண்டியும் சூப்பர்ஸ்டார் ரஜினியை ஆறு முதல் அறுபது வரை விரும்புவதற்கு அவரது எளிமையே காரணம். அவரது எளிமையை பரைசாற்றும் மற்றொரு சான்றாக அவரது கார்களின் பட்டியலை இங்கே வழங்குகிறோம்.

ஆஸ்தான முதல் வாகனம்

ஆஸ்தான முதல் வாகனம்

முதல் ஆஸ்தான வாகனம் 1980கள் முதல் 1990கள் வரை பிரிமியர் பத்மினிதான் ரஜினியின் ஆஸ்தான வாகனம்.

ரஜினியின் அன்பு தம்பி 'அம்பி'

ரஜினியின் அன்பு தம்பி 'அம்பி'

90களில் இருந்து 2000ம் ஆண்டு வரை அம்பாசடர் கார்தான் ரஜினியின் அடுத்த ஆஸ்தான வாகனமாக மாறியது.

 சிவிக்கில் திடீர் விஜயம்

சிவிக்கில் திடீர் விஜயம்

நீண்ட நாட்கள் அம்பாசடரை பயன்படுத்திய அவர் அடுத்து சில ஆண்டுகள் ஹோண்டா சிவிக் காரை பயன்படுத்தினார்.

இன்னோவா

இன்னோவா

சிவிக் காருக்கு அடுத்து டொயோட்டா இன்னோவா காரை பயன்படுத்த தொடங்கினார். கஸ்டமைசேஷன் உள்ளிட்ட எந்த சிறப்பு வசதிகளும் இந்த காரில் கிடையாது.

பிஎம்டபிள்யூவா... எனக்கா...ஹாஹாஹா..!!

பிஎம்டபிள்யூவா... எனக்கா...ஹாஹாஹா..!!

ரா.ஒன் இந்தி படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்ததற்காக ஷாரூக்கான் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை பரிசாக வழங்கினார். ஆனால், அதை வேண்டாம் என்று அன்போடு மறுத்துவிட்டார் ரஜினி.

ரோல்ஸ்ராய்ஸ் குறையை போக்கிய ரஜினி

ரோல்ஸ்ராய்ஸ் குறையை போக்கிய ரஜினி

ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இயக்குனர் ஷங்கர், விஜய், தனுஷ் ஆகியோர் இணைந்து விட்ட நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் அந்த கார் இல்லையே என்ற வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உண்டு. அந்த வருத்தத்தை போக்கும் விதத்தில், லிங்கா படத்தில் பல ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வைத்திருக்கும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

விண்டேஜ் கார்கள்

விண்டேஜ் கார்கள்

ரோல்ஸ்ராய்ஸ் மட்டுமின்றி, லிங்கா படத்தில் விண்டேஜ் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார்கள் புடைசூழ ரஜினிகாந்த் வரும் காட்சியில் ரசிகர்களிடமிருந்து விசில் பறந்தது. இதன்மூலம், ரோல்ஸ்ராய்ஸ் இல்லாத குறையை படத்தின் மூலம் போக்கினார்.

ஸ்டைல்

ஸ்டைல்

வயசானாலும் ஸ்டைல் மாறவில்லை என்பதை உணர்த்தும் வகையில், லிங்காவில் போதும் போதும் எனும் அளவுக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. மேலும், ஒரு காட்சியில் ரோல்ஸ்ராய்ஸ் காரையே மறக்கடிக்கச் செய்யும் ரஜினியின் ஸ்டைலான நடை. தியேட்டரில் இந்த காட்சிக்கு விசில் காதை பிளந்தது.

சினிமாவில் சிங்கம்...

சினிமாவில் சிங்கம்...

தனிப்பட்ட வாழ்வில் எளிமையை கடைபிடித்தாலும், லிங்கா படத்தில் பணக்காரத்தனத்தை காட்டும் பல காட்சிகள் ரஜினிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில், அபுதாபியில் உள்ள ஃபெராரி வேர்ல்டு பொழுதுபோக்கு பூங்காவிலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், விலையுயர்ந்த கார்களும் ஏராளமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆடி ஆசை...

ஆடி ஆசை...

பல நடிகர்கள் ஆடி கார் மீது அலாதி வைத்திருக்கின்றனர். ஆனால், ஆடி ஆசை அறவே இல்லாத நடிகராக இருக்கிறார். ஆனால், அதே லிங்கா படத்தில் ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவியையும் அவர் பயன்படுத்தியிருந்தார்.

 
Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
What to know Cars owned by Rajnikanth? We look at Rajnikanth's Cars. What's your take on Rajnikanth's car collection?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X