உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

சென்னையில் தன்னுடைய உறவினரின் காரை, ஒருவர் தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

பொதுவாக உங்களிடம் கார் இருந்தால், உறவினர்களோ அல்லது நண்பர்களோ, அதனை தங்கள் தேவைக்கு கேட்பது வழக்கமான ஒன்றுதான். அவர்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்ல வேண்டி இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு தேவைக்கோ உங்கள் காரை கேட்கலாம். அதிலும் குறிப்பாக நீங்கள் புதிய காரை வாங்கியிருந்தால், பலர் அதனை ஓட்டி பார்ப்பதற்கு கேட்பார்கள்.

உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

புதிதாக வாங்கிய கார் என்பதால், உடனடியாக அதனை மற்றவர்கள் ஓட்டி பார்க்க ஒரு சில உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அப்படி உறவினருக்கு காரை ஓட்டி பார்க்க தர மறுத்தவருக்கு, கடும் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காரை ஓட்டி பார்க்க தர மறுத்த கோவத்தில், அவருடைய உறவினர் காரை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சென்னை சைதாப்பேட்டை பகுதியில், இன்று காலை (அக்டோபர் 1ம் தேதி) நடைபெற்றுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் காப்பீட்டு ஆலோசகராக வேலை செய்து வரும் டோமினிக் என்பவரின் கார்தான் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது, அது ஹூண்டாய் நிறுவனத்தின் மிக பிரபலமான ஹேட்ச்பேக் மாடலான ஐ20 போல் தெரிகிறது. இந்த காரை டோமினிக்கின் மகனான டார்வினும் அவ்வப்போது ஓட்டுவது வழக்கம். அப்படி ஒரு முறை டார்வின், தனது தந்தையின் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

அப்போது டோமினிக் மனைவியின் தம்பி மகனான ஜர்விஸ் என்பவர் அவ்வழியாக வந்துள்ளார். அவர் காரில் ஏற விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் டார்வின் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அதற்கு முன்பாக காரை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஜர்விஸின் ஆசையையும் டார்வின் நிராகரித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜர்விஸ், கீழே கிடந்த கல்லை எடுத்து கார் கண்ணாடியை உடைத்தார்.

உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

இந்த சம்பவம் நடைபெற்றபோதே, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனால் டார்வின் மற்றும் ஜர்விஸ் ஆகியோருக்கு இடையே மன கசப்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில், டோமினிக்கின் வீட்டிற்கு அருகே இன்று அதிகாலை, அவரது கார் வருவதை ஜர்விஸ் பார்த்துள்ளார். இதன்பின் காரை மறித்து அவர் தகராறில் ஈடுபட்டார்.

உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

வாக்குவாதம் முற்றவே, பெட்ரோலை எடுத்து டோமினிக்கின் கார் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து ஜர்விஸ் தப்பி சென்றார். ஆனால் காரில் தீப்பற்றிய உடனேயே, அதிர்ஷ்டவசமாக அக்கம் பக்கம் இருந்த நபர்கள் தீயை உடனடியாக அணைத்து விட்டதாக கூறப்படுகிறது. புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது, கார் பெரிய அளவில் சேதம் அடைந்ததை போல் தெரியவில்லை.

உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டி பார்க்க தர மறுத்த தகராறில், கார் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக உறவினர்கள், நண்பர்களுக்கு காரை கொடுத்து விட்டு, தேவையில்லாத பிரச்னைகளில் சிலர் சிக்கி கொள்கின்றனர்.

உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

அந்த அச்சமே பெரும்பாலும் மற்றவர்களுக்கு காரை வழங்குவதற்கு தடையாக உள்ளது. ஒரு வேளை உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு நீங்கள் காரை வழங்குவது என முடிவு செய்து விட்டால், ஒரு சில முன் எச்சரிக்கைகளை மனதில் கொள்வது அவசியம். உங்கள் காரை நீங்கள் ஒருவருக்கு கொடுக்கும் முன் அவருடைய டிரைவிங் திறன்கள், டிரைவிங் வரலாற்றை தெரிந்து வைத்திருப்பது முக்கியமானது.

உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

அதேபோல் உங்கள் காரை வாங்கி செல்லும் நபரிடம் முறையான ஓட்டுனர் உரிமம் உள்ளதா? என்பதையும் பரிசோதித்து கொள்வது மிக அவசியம். ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால், காரை வழங்குவதை தவிர்ப்பது நல்லது. அதேபோன்று வாகன பதிவு சான்றிதழ் மற்றும் காப்பீடு போன்ற முக்கியமான ஆவணங்களின் நகல்களை காரில் பாதுகாப்பான இடத்தில் வைத்து விடுங்கள்.

உறவினரின் காரை கொளுத்திய நபர்... காரணத்தை கேட்டதும் வாகன உரிமையாளர்களுக்கு வேர்த்து கொட்டீருச்சு...

அவை எங்கே உள்ளன? என்பதையும், காரை வாங்கி செல்லும் நபரிடம் தெரிவித்து விடுங்கள். அதே சமயம் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு காரை வழங்குவதை தவிர்த்து விடுவது சிறந்தது. மற்றவர்களுக்கு காரை வழங்குவதில் இருக்கும் மிகப்பெரிய அபாயமே விபத்துதான். மது அருந்தும் நபர்கள் விபத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Things You Should Do Before Lending Your Car To Friends And Relatives. Read in Tamil
Story first published: Thursday, October 1, 2020, 18:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X