உபேர் டிரைவரை ஹெலிகாப்டரில் ரைடுக்கு அழைத்து சென்ற பயணி! யோகக்காரருங்க இந்த டிரைவர்! வீடியோ!

உபேர் டிரைவராக பணியாற்றி வரும் ஓர் நபருக்கு ஹெலிகாப்டரில் பயணிக்கும் அனுபவம் பயணி ஒருவரால் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறிக்க முழுமையான தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

உபேர் டிரைவரை ஹெலிகாப்டரில் ரைடுக்கு அழைத்து சென்ற பயணி! யோகக்காரருங்க இந்த டிரைவர்! வீடியோ!

உபேர் டிரைவராக பணியாற்றும் ஓர் நபருக்கு ஒரு நாள் ஹெலிகாப்டரில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இந்த வாய்ப்பு அவரிடம் சவாரிக்காக வந்தவர் வாயிலாக கிடைத்திருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. உபேர் கால் டாக்சி நிறுவனத்தில் பகுதி நேரமாக பணியாற்றுபவர் டேரன்.

உபேர் டிரைவரை ஹெலிகாப்டரில் ரைடுக்கு அழைத்து சென்ற பயணி! யோகக்காரருங்க இந்த டிரைவர்! வீடியோ!

இவர் யுட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். அந்த சேனலில் தன்னுடன் சவாரியில் ஈடுபடும் நபர்கள்குறித்த வீடியோவை அவர் வெளியிட்டு வருகின்றார். குறிப்பாக, சவாரி புக் செய்து, பயணத்தின்போது சுவாரஷ்யமாக நடந்துக் கொள்ளும் நபர்களைப் பற்றிய வீடியோவை மட்டுமே யுட்யூப் சேனலில் அவர் பதிவிட்டு வருகின்றார்.

உபேர் டிரைவரை ஹெலிகாப்டரில் ரைடுக்கு அழைத்து சென்ற பயணி! யோகக்காரருங்க இந்த டிரைவர்! வீடியோ!

அந்தவகையில், மிக சமீபத்தில் சவாரிக்கு வந்தவரே எட். இவரின் வாயிலாகவே டேரன் ஹெலிகாப்டரில் பயணிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார். ஓர் நாள் அதிகாலை 6மணிக்கு டேரனுக்கு ஏர்போர்ட் வரை செல்வதற்கான பயண புக்கிங் கிடைத்திருக்கின்றது.

உபேர் டிரைவரை ஹெலிகாப்டரில் ரைடுக்கு அழைத்து சென்ற பயணி! யோகக்காரருங்க இந்த டிரைவர்! வீடியோ!

எட்தான் இந்த சவாரியை புக் செய்தவர். முதல் பயணத்தின்போதே நல்ல சுவாரஷ்யமான உரையாடல்களை இருவரும் பகிர்ந்திருக்கின்றனர். அப்போது தான் ஒரு ஹெலிகாப்டர் பைலட் என எட் தன்னை டேரனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

உபேர் டிரைவரை ஹெலிகாப்டரில் ரைடுக்கு அழைத்து சென்ற பயணி! யோகக்காரருங்க இந்த டிரைவர்! வீடியோ!

மேலும், தான் சிறு வயதில் பேட்மேன் படத்தின் மிகப்பெரிய விசிறி என்றும், இதன் காரணத்தினால்தான் தான் பைலட்டாக தற்போது பணியாற்றுகிறேன் என்றும் எட் கூறினார். இந்த நிலையிலேயே டேரனை தன்னுடன் ஒரு நாள் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார் எட். ஆனால், அதற்கு ஆரம்பத்தில் டேரன் மறுப்பு தெரிவித்திருக்கின்றார்.

உபேர் டிரைவரை ஹெலிகாப்டரில் ரைடுக்கு அழைத்து சென்ற பயணி! யோகக்காரருங்க இந்த டிரைவர்! வீடியோ!

தொடர்ந்து, தனக்கு ஸ்கை-டைவிங் செய்த அனுபவம் இருப்பதாக எட் இடம் டேரன் தெரிவித்தார். இதன் பின்னர் ஓர் நாள் டேரனை செல்போனில் அழைத்த எட், நீங்கள் விரும்பினால் ஹெலிகாப்டரில் பயணிப்பதற்கான அனைத்து வேலைகளையும் நான் செய்ய தயாராக இருக்கின்றேன் கூறியிருக்கின்றார்.

உபேர் டிரைவரை ஹெலிகாப்டரில் ரைடுக்கு அழைத்து சென்ற பயணி! யோகக்காரருங்க இந்த டிரைவர்! வீடியோ!

அதற்கு உபேர் டிரைவர் டேரன் ஒப்புக் கொண்டார். இதையடுத்தே உபேர் டிரைவருக்கு ஹெலிகாப்டரில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தான் ஹெலிகாப்டரில் பயணித்ததுகுறித்த வீடியோவை உபேர் டிரைவர் அவரது யுட்யூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்.

Image Courtesy: DarrenLevyOfficial

"என்னுடைய உபேர் பயணியால் ஹெலிகாப்டரில் பறக்கும் வாய்ப்பு" கிடைத்துள்ளது என டேரன் அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். டேரனை பலர் யோகக்காரர் என புகழ்ந்திருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uber Passenger Invites Driver For A Helicopter Ride. Read In Tamil.
Story first published: Saturday, July 17, 2021, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X