உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகருக்கு உலகின் நீண்ட தொலைவுக்கான இடைநில்லா விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த விமான சேவை குறித்த செய்திகளை படித்திருப்பீர்கள். ஆனால், இந்த விமானத்தின் பயணம், இந்த பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விமானத்தின் தொழில்நுட்ப சிறப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

சிங்கப்பூர் - நியூயார்க் இடையே 15,344 கிமீ தூரத்திற்கு இந்த இடைநில்லாமல் செல்லும் நான் ஸ்டாப் விமானம் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேவையை துவங்கி இருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து செல்லும் பயணிகள் பிராங்க்ஃபர்ட் சென்று அங்கு அமெரிக்காவிற்கு விமானம் மாறிச் செல்வது வழக்கம். ஆனால், இந்த நேரடி விமானம் மூலமாக 5 முதல் 6 மணிநேரம் குறைவு என்பது மிக முக்கிய விஷயம்.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

பொதுவாக இதுபோன்ற நீண்ட தூர தடங்களில் 4 எஞ்சின்கள் கொண்ட விமானங்கள் பயன்படுத்தப்படும். ஏற்கனவே, இந்த தடத்தில் ஏர்பஸ் நிறுவனத்தின் 4 எஞ்சின்கள் கொண்ட A-340-500 என்ற விமானம்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த தடத்தில், இரண்டு எஞ்சின்கள் கொண்ட A350 விமானம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமானத்தை இயக்குவதற்கு பார்க்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்று, பாதுகாப்பு வரலாறு. இந்த விமானத்தில்தொழில்நுட்பக் கோளாறுகளால் அவசரமாக தரை இறக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை பெரிய அளவிலான விபத்தில் சிக்கி, பயணித்தோர் ஒருவர் கூட உயிரிழந்த சம்பவங்கள் இல்லை. இந்த விமானத்தை கையில் எடுக்க இதுதான் முக்கிய விஷயம்.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

நான் ஸ்டாப் விமானத்தை இயக்குவதில் ஆக முக்கிய விஷயமாக கருதப்படுவது எரிபொருள் அளவு. அவசர சமயங்களில் இலக்காக கொண்டு செல்லும் நகரத்தின் விமான நிலையங்களில் தரை இறக்குவதில் தடங்கல் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு செல்வதற்கான எரிபொருள் ரிசர்வில் இருக்க வேண்டும்.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

எனவே, ஆசியாவிலிருந்து செல்லும் விமானங்கள் ஏதேனும் ஒரு ஐரோப்பிய நாட்டில் இறங்கி, பெட்ரோல் நிரப்பி விட்டு பயணத்தை தொடரும். ஆனால், இந்த ஏ-350 -900 Ultra Long Range(ULR) என்ற விமான மாடல் இந்த சேவையில் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண ஏர்பஸ் ஏ-350 விமானத்தில் 1,41,000 லிட்டர் எரிபொருள் நிரப்ப முடியும். ஆனால், இந்த விமானத்தில் 1,65,000 லிட்டர் எரிபொருள் நிரப்ப முடியும்.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

இதன்மூலமாக, 19 மணிநேரம் வரை இடைநில்லாமல் பறப்பதற்கு தேவையான எரிபொருளும், ரிசர்வ் எரிபொருளும் இந்த விமானத்தில் நிரப்பிக் கொள்ள முடிகிறது. இதன்மூலமாக, அவசர சமயத்தில் இலக்கு வைக்கப்பட்ட விமான நிலையத்தில் இறங்க முடியாவிட்டாலும், அருகிலுள்ள விமான நிலையம் வரை செல்ல முடியும். மொத்தமாக 111 டன் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

17 மணி 52 நிமிடங்களில் முதல் பயணத்தை இந்த விமானம் நிறைவு செய்தது. இந்த விமானம் முதல் பயணத்தில் நியூயார்க் விமான நிலையத்தை அடைந்தபோது, 8 டன் எரிபொருள் மீதமிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ340 விமானத்தை இயக்கியபோது 2,20,000 லிட்டர் எரிபொருள் செலவானது.

MOST READ: பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

ஆனால், இந்த விமானம் 25 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தர வல்லது என்பதும், குறைவான மாசு உமிழ்வு கொண்டது. அதேநேரத்தில், நியூயார்க் நகரிலிருந்து சிங்கப்பூர் திரும்பும்போது எதிர்காற்றில் விமானம் பறக்க வேண்டும் என்பதால், கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதும் கணிக்கப்பட்ட ஒன்றுதான்.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

19 மணிநேரம் பயண நேரத்தை கொண்டிருந்தாலும், 20 மணிநேரம் வரை பறப்பதற்கான எரிபொருள் இந்த விமானத்தில் இருக்கும். மேலும், இந்த விமானத்தில் அதிக எரிபொருள் நிரப்பும் வகையில் கலனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் எரிபொருள் கலன் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

போயிங் விமானங்களைவிட ஏர்பஸ் விமானங்களில் சப்த தடுப்பு அமைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். இதனால், பயணிகளுக்கான கேபினில் அதிர்வுகளும்,சப்தமும் குறைவாக இருக்கும். சிங்கப்பூர் - நியூயார்க் இடையிலான ஏர்பஸ் ஏ350- 9000ULR விமானத்தில் 80 முதல் 85 டெசிபல் அளவு கேபினில் இறைச்சல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

ஆனால், பிசினல் கிளாஸ் இருக்ககைகளில் 70 டெசிபல் அளவும், பிரிமீயம் எக்கானமி வகுப்பு இருக்கை பகுதியில் 80 டெசிபல் அளவுக்கும் இறைச்சல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விமானம் எதிர்பார்த்ததைவிட மிக சொகுசான, மென்மையான பயண உணர்வை அளித்ததாக பயணித்தோர் தெரிவித்துள்ளனர்.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட விமானங்களில் இது அகலமான உடற்கூடு அமைப்பு கொண்டது. இதனால், உட்புறத்தில் மிக விசாலமான இடவசதியை அளிக்கிறது. இந்த விமானத்தில் சாதாரண எக்கானமி வகுப்பு இருக்கைகள் கிடையாது. 94 பிரிமீயம் எக்கானமி வகுப்பு இருக்கைகளும் , 67 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளும் உள்ளன. மொத்தம் 161 பேர் பயணித்தனர்.

MOST READ: எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்ஸ்!

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

பிசினஸ் கிளாஸ் என்பது படுக்கை வசதி கொண்டது. வைஃபை இணைய வசதியும், பொழுதுபோக்கு வசதிகளும் இருந்ததால், பெரும்பாலான பயணிகள் இந்த நீண்ட தூர பயணம் சோர்வை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். இந்த தடத்தில் குறைவான அளவே வைஃபை வசதி தடங்கல் இருந்ததால், பலர் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழித்துள்ளனர்.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் சென்ற இந்த விமானம் பாதுகாப்பு கருதி, அருகில் நிலப்பரப்பை ஒட்டிய பசிபிக் கடல் பகுதி வழியாக பயணித்தது. அவசர சமயத்தில் அருகிலுள்ள விமான நிலையத்தை பிடிப்பதற்கான உத்தி இது.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

மொத்தம் 4 விதமான தடங்களை விமானிகள் தேர்வு செய்ய முடியும். அதில், சிங்கப்பூரிலிருந்து சீனா, ஜப்பான் மற்றும் கிழக்கு ரஷ்ய நிலப்பகுதிகளுக்கு அருகாமையில் பயணித்து அமெரிக்க கண்டத்திலுள்ள அலாஸ்கா மற்றும் கிழக்கு கனடா வழியாக நியூயார்க் சென்றடைந்துள்ளது.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

இந்த விமானம் அதிகபட்சமாக 950 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் வாய்ந்தது. சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட விமானம் நியூயார்க்கை அடைவதற்கு சராசரியாக மணிக்கு 870 கிமீ வேகத்தில் சென்றுள்ளது. இந்த விமானத்தில் இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் XWB எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானத்தை இயக்குவதற்கு இரண்டு விமானிகளே போதும்.

உட்புறத்தில் குறைவான சப்தம், விசாலமான இடவசதி, அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் ஏர்பஸ் ஏ350-900ULR சிறப்பானதாக இருப்பதே இந்த தடத்தில் இயக்கப்படுவதற்கு முக்கிய காரணம்.

முன்னதாக தோஹா- ஆக்லாந்து இடையே இயக்கப்பட்டு வரும் கத்தார் ஏர்வேஸ் விமானம்தான் உலகின் நீண்ட தொலைவு இடைநில்லாமல் பயணிக்கும் விமான சேவையாக இருந்தது. இந்த விமானம் 14,535 கிமீ தூரம் பயணிக்கிறது. ஆனால், சிங்கப்பூர்- நியூயார்க் இடையிலான இந்த புதிய விமானம் 15,344 கிமீ தூரம் பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? - காரணங்கள்!

2015ம் ஆண்டு முதல்முதலாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் மூலமாக இந்த ஏர்பஸ் ஏ350 விமானம் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 21 விமான நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை 204 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம்தான் இந்த சேவைக்கான ஏ-350-900 விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் டெலிவிரி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Source: Airbus

Tamil
மேலும்... #ஆஃப் பீட்
English summary
Why Singapore airlines chose A350-900ULR Plane for World's longest Non Stop Route?
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more