டிரைவரில்லாமல் இயங்கும் உலகின் முதல் தானியங்கி 'பாட்' டாக்சி துபாயில் சோதனை ஓட்டம்!

டிரைவரில்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் உலகின் புதிய போக்குவரத்து சாதனத்தின் சோதனை ஓட்டம் துபாயில் துவங்கப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

டிரைவரில்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் பாட் டாக்சியின் சோதனை ஓட்டம் துபாயில் துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 உலகின் முதல் தானியங்கி பாட் டாக்சி துபாயில் சோதனை ஓட்டம்!

உலகின் முக்கிய சுற்றுலா மற்றும் வர்த்தக நகரமான துபாய் நகர நிர்வாகம் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தி, நவீனமாக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 2020ம் ஆண்டு அங்கு நடைபெற இருக்கும் உலக வர்த்தக கண்காட்சிக்கு லட்சக்கணக்கானோர் துபாய் நகருக்கு வருவார்கள் என்பதால், அதற்கு தக்கவாறு போக்குவரத்து துறையை மேம்படுத்தி வருகிறது.

 உலகின் முதல் தானியங்கி பாட் டாக்சி துபாயில் சோதனை ஓட்டம்!

கடந்த ஆண்டு டிரைவரில்லாமல் இயங்கும் பயணிகள் வேன் ஒன்றை சோதித்து பார்க்கும் முயற்சியை துவங்கியது. அதேபோன்று, துபாய் நகரில் பறக்கும் டாக்சியையும் சோதித்து பார்த்து வருகிறது. அடுத்ததாக, தற்போது டிரைவரில்லாமல் இயங்கும் பாட் டாக்சி போக்குவரத்து சாதனங்களை சோதித்து பார்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

 உலகின் முதல் தானியங்கி பாட் டாக்சி துபாயில் சோதனை ஓட்டம்!

துபாய் நகருக்குள் குறைவான மற்றும் நடுத்தர தொலைவு பயணிக்க விரும்புவோருக்கு ஏற்ற வகையில், இந்த பாட் டாக்சி சேவை பரிசோதித்து பார்க்கப்பட உள்ளது. இந்த பாட் டாக்சி சாதனங்கள் இதற்காக அமைக்கப்பட்ட பிரத்யேக தடங்களில் செல்லும்.

 உலகின் முதல் தானியங்கி பாட் டாக்சி துபாயில் சோதனை ஓட்டம்!

இரண்டு பாட் டாக்சிகள் சோதனைக்காக களமிறக்கப்பட்டு இருக்கிறது. பார்ப்பதற்கு மினி வேன் போல இருக்கும் இந்த பாட் டாக்சி சாதனம் ஒவ்வொன்றும் 2.87 மீட்டர் நீளமும், 2.24 மீட்டர் அகலமும், 2.82 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த பாட் டாக்சியானது 1.5 டன் எடை கொண்டுள்ளது.

Recommended Video

Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
 உலகின் முதல் தானியங்கி பாட் டாக்சி துபாயில் சோதனை ஓட்டம்!

ஒவ்வொரு பாட் சாதனத்திலும் 10 பேர் வரை பயணிக்க முடியும். 6 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியும், 4 பேர் நின்று கொண்டு செல்வதற்கான இடவசதியையும் பெற்றிருக்கிறது.

 உலகின் முதல் தானியங்கி பாட் டாக்சி துபாயில் சோதனை ஓட்டம்!

இந்த பாட் டாக்சி சாதனம் பேட்டரி துணையுடன் மின் மோட்டாரில் இயங்குகிறது. எனவே, புகைக்கு வேலை இல்லை. பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், அதிகபட்சமாக 3 மணிநேரம் வரை பயணிக்கும்.

 உலகின் முதல் தானியங்கி பாட் டாக்சி துபாயில் சோதனை ஓட்டம்!

பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் பிடிக்கும் என்பதுதான் சிறிய குறை. இந்த பாட் டாக்சி, அதற்கான தடங்களில் அதிகபட்சமாக 20 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

 உலகின் முதல் தானியங்கி பாட் டாக்சி துபாயில் சோதனை ஓட்டம்!

விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில், இந்த பாட் டாக்சி போக்குவரது சாதனங்கள் மூன்றுவிதமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. கட்டுப்பாட்டு அறையிலிருந்தே கண்காணித்து இயக்க முடியும். ஓட்டுனரை வைத்தும் இயக்கும் வசதியை பெற்றிருக்கிறது. மெட்ரோ ரயில் போலவே நுட்பத்தில் சற்று வேறுபடுகிறது.

 உலகின் முதல் தானியங்கி பாட் டாக்சி துபாயில் சோதனை ஓட்டம்!

இந்த பாட் டாக்சிகள் தானியங்கி முறையில் கழற்றி மாட்டிக் கொள்ளும் தொழில்நுட்பத்தை பெற்றிருப்பதுதான் இதன் ஹைலைட். குறிப்பிட்ட இடம் வரை மட்டுமே ஒரு பாட் டாக்சி தேவையென்றால், ஓடிக்கொண்டிருக்கும்போதே, ஒன்றிலிருந்து மற்றொன்று தானாக கழன்று கொள்ளவும், இணைத்துக் கொள்ளவும் முடியும்.

 உலகின் முதல் தானியங்கி பாட் டாக்சி துபாயில் சோதனை ஓட்டம்!

மாசு இல்லா போக்குவரத்து துறையில் இந்த புதிய பாட் டாக்சி சேவை புதிய கோணத்தில் கொண்டு செல்லும் என்று நம்பலாம்.

Source: Gulfnews

பெங்களூரில் அறிமுகமாகிறது பாட் டாக்சி... வழித்தட விபரம்!

 பெங்களூரில் அறிமுகமாகிறது பாட் டாக்சி... வழித்தட விபரம்!

நாட்டிலேயே அதிக போக்குவரத்து நெரிசலால் பெரும் இழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்து வரும் பெரு நகரங்களில் பெங்களூர் முதன்மை வகிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் அங்கு போக்குவரத்து நெரிசல் சொல்லி மாளா அளவுக்கு அன்றாட பிரச்னையாகி உள்ளது.

 பெங்களூரில் அறிமுகமாகிறது பாட் டாக்சி... வழித்தட விபரம்!

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதத்தில், பொது போக்குவரத்து கட்டமைப்பை செம்மைபடுத்தும் முயற்சிகளில் பெங்களூர் பெருநகர மாநகராட்சி நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், பல இடங்களில் அதன் பலன் கிடைக்கவில்லை. மேலும், மெட்ரோ ரயில் கட்டமைப்பை உருவாக்க ஆகும் காலமும், முதலீடும் மிக அதிகம்.

Picture credit: Wiki Commons

 பெங்களூரில் அறிமுகமாகிறது பாட் டாக்சி... வழித்தட விபரம்!

இதனை கருத்தில் கொண்டு உடனடி தீர்வு காணும் விதத்தில், பாட் டாக்சி எனப்படும் புதுமையான போக்குவரத்து கட்டமைப்பை பெங்களூரில் கொண்டு வருவதற்கு பெருநகர நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

Picture credit: Wiki Commons

 பெங்களூரில் அறிமுகமாகிறது பாட் டாக்சி... வழித்தட விபரம்!

ஏற்கனவே, பாட் டாக்சி போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான டென்டர் விடப்பட்டடுவிட்டது. இதில், சிங்கப்பூரை சேர்ந்த அல்ட்ரா ஃபேர்வுட் க்ரீன் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், ஜேபாட்ஸ் நிறுவனம் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஸ்கை ட்ரான் ஏசியா போன்ற நிறுவனங்கள் பாட் டாக்சி கட்டமைப்பை உருவாக்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.

Picture credit: Podcars.com

 பெங்களூரில் அறிமுகமாகிறது பாட் டாக்சி... வழித்தட விபரம்!

இந்த சூழலில் தற்போது முதல்கட்டமாக செயல்படுத்த இருக்கும் வழித்தடம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. பெங்களூரின் மத்திய பகுதியாக விளங்கும் எம்ஜி ரோட்டில் உள்ள ட்ரினிட்டி சர்க்கிளிலிருந்து, சாஃப்ட்வேர் அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த ஒயிட்ஃபீல்டு பகுதி வரை பாட் டாக்சி இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மொத்தம் 30.5 கிமீ தூரத்திற்கு இந்த வழித்தடம் அமைய உள்ளது. ட்ரினிட்டி சர்க்கிள் மெட்ரோ ரயில் நிலையத்தையும் ஒயிட் ஃபீல்டையும் பழைய ஏர்போர்ட் சாலை வழியாக இணைக்கும் விதத்தில் இந்த பாட் டாக்சி வழித்தடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

Picture credit: Podcars.com

 பெங்களூரில் அறிமுகமாகிறது பாட் டாக்சி... வழித்தட விபரம்!

ட்ரினிட்டி சர்க்கிள், அக்ரம், டொம்ளூர், ஓட்டல் லீலா பேலஸ், பிஇஎம்எல், எச்ஏஎல் ஏர்போர்ட், ஃபெர்ன்ஸ் சிட்டி[மாரத்தஹள்ளி], காந்தி நகர், புரூக்ஃபீல்டு, பரிமளா சன்ரிட்ஜ், நல்லூரஹள்ளி மற்றும் வெர்ஜினியா மால் வரை 12 பாட் டாக்சி நிறுத்தும் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

Picture credit: Podcars.com

 பெங்களூரில் அறிமுகமாகிறது பாட் டாக்சி... வழித்தட விபரம்!

ஏற்கனவே, ட்ரினிட்டி சர்க்கிள்- பைப்பனஹள்ளி வழித்தடமானது ஓல்டு மெட்ராஸ் ரோடு வழியாக ஓயிட்ஃபீல்டு வரை இணைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், எச்ஏஎல் ஏர்போர்ட் சாலை வழியாக பாட் டாக்சி போக்குவரத்து மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் விதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

Picture credit: Wiki Commons

 பெங்களூரில் அறிமுகமாகிறது பாட் டாக்சி... வழித்தட விபரம்!

பாட் டாக்சியை இயக்குவதற்கான கட்டமைப்பை மிக விரைவாக ஏற்படுத்த முடியும். மேலும், சாலையின் சென்டர் மீடியனில் தூண்களை அமைத்து எளிதாக நிறுவ முடியும். மெட்ரோ ரயிலை ஒப்பிடும்போது முதலீடு குறைவு. இந்த பாட் டாக்சி முற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்குவதால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

Picture credit: Wiki Commons

 பெங்களூரில் அறிமுகமாகிறது பாட் டாக்சி... வழித்தட விபரம்!

வரும் ஜனவரி மாதத்தில் பாட் டாக்சி அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்டுமானப் பணிகள் மிக விரைவாக முடியும் வாய்ப்பு இருப்பதால், அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2019ம் ஆண்டு மத்தியில் பாட் டாக்சி சேவை கிடைப்பதற்கான வாய்ப்பு பெங்களூர்வாசிகளுக்கு உள்ளது.

Picture credit: Wiki Commons

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World’s first ‘Autonomous Pods’ in Dubai.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X