பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

இந்தியாவில் கிடைக்கும் ஒரு சில பைக்குகள், பிஎம்டபிள்யூ காரை விட வேகமாக சீறிப்பாய்கின்றன. பிஎம்டபிள்யூ காருடன் ஒப்பிடுகையில் அவற்றின் விலையும் கூட பல மடங்கு குறைவுதான்.

By Arun

இந்தியாவில் கிடைக்கும் ஒரு சில பைக்குகள், பிஎம்டபிள்யூ காரை விட வேகமாக மிக மிக வேகமாக சீறிப்பாய்கின்றன. பிஎம்டபிள்யூ காருடன் ஒப்பிடுகையில் அவற்றின் விலையும் கூட பல மடங்கு குறைவுதான். அப்படிப்பட்ட பைக்குகளில் அடங்கியிருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

பிஎம்டபிள்யூ 3 சீரிஸின் 320டி வேரியண்ட் இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான கார். இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றும் கூட. இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 184 பிஎச்பி பவர் மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாயும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7.2 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும்.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 40 லட்ச ரூபாய். ஆனால் இந்த விலையுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு மலிவாக கிடைக்கும் சில பைக்குகள், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 320d காரை விட அதிவேகத்தில் சீறிப்பாயும்.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310

விலை: ரூ.2.23 லட்சம், எக்ஸ் ஷோரூம், டெல்லி

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில், தனது முதல் ஃபுல்லி ஃபேர்டு பைக்கை, அப்பாச்சி ஆர்ஆர் 310 வடிவில் வெளியிட்டது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்டது.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 312.2 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவர் மற்றும் 27.3 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது. இந்த பைக் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7.1 வினாடிகளில் எட்டிவிடும். இது பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 320d காரின் 7.2 வினாடிகளுடன் ஒப்பிடுகையில் சற்று அதிவேகமானது.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

கேடிஎம் 390 டியூக்

விலை: ரூ.2.29 லட்சம், டெல்லி எக்ஸ் ஷோரூம்

இந்தியாவில் கிடைக்கும் மிகவும் பிரபலமான பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளில் ஒன்று கேடிஎம் 390 டியூக். இந்த பைக் மிக மிக வேகமானதும் கூட. இந்த பைக்கில், 373 சிசி, லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

இந்த இன்ஜின் 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இந்த பைக் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.6 வினாடிகளிலேயே எட்டிவிடும் (பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் 320d 7.2 வினாடிகள்).

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

கேடிஎம் ஆர்சி 390

விலை: ரூ.2.34 லட்சம், டெல்லி எக்ஸ் ஷோரூம்

கேடிஎம் 390 டியூக் பைக்கின் ஃபுல்லி ஃபேர்டு வெர்ஷன்தான் ஆர்சி 390. இந்த பைக்கின் ரைடிங் பொசிஷன் ஆக்ரோஷமானது. இதன்மூலம் டிராக் ரைடிங்கிற்கு மிகவும் உகந்ததாக இந்த பைக் கருதப்படுகிறது. இந்த பைக்கும் ப்யூயல் இன்ஜெக்டட் 373 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

கேடிஎம் 390 டியூக் பைக்கை போல், கேடிஎம் ஆர்சி 390 பைக்கும், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.6 வினாடிகளிலேயே எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. கியர்களை வேகமாக மாற்றுவதற்காக இந்த பைக்கில், ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

கவாஸகி நின்ஜா 300

விலை: ரூ.3.6 லட்சம், டெல்லி எக்ஸ் ஷோரூம்

கவாஸகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் மலிவான ஃபுல்லி ஃபேர்டு பைக் நின்ஜா 300தான். மிகவும் பிரபலமான நின்ஜா சீரிஸின் என்ட்ரி லெவல் பைக் இது. இந்த பைக்கின் விலையை குறைப்பதற்காக, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என கவாஸகி நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

கவாஸகி நின்ஜா 300 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 296 சிசி, பேரல்லல் டிவின், லிக்விட் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 38.5 பிஎச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை உருவாக்கி சீறிப்பாயும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.5 வினாடிகளில் நின்ஜா 300 எட்டிவிடும்.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

யமஹா YZF-R3

விலை: ரூ.3.48 லட்சம், டெல்லி எக்ஸ் ஷோரூம்

2018 ஆட்டோ எக்ஸ்போ மூலமாக, புதிய YZF-R3 பைக்கை, யமஹா நிறுவனம் இந்தியாவில் லான்ச் செய்தது. டிராக் ஓரியண்டட் பெர்ஃபார்மென்ஸ் பைக்கான இது, யமஹாவின் மலிவான டிவின் சிலிண்டர் பைக்குகளில் ஒன்றும் கூட. இந்தியாவில் YZF-R3 பைக், அதன் செக்மெண்ட் விற்பனையில் அடித்து தூள் கிளப்புகிறது.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

யமஹா YZF-R3 பைக்கில், 321 சிசி, பேரல்லல் டிவின், லிக்விட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 41.4 பிஎச்பி பவர் மற்றும் 29.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாயும்.

பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..

மிகவும் ஸ்மூத் என கருதப்படும் யமஹா YZF-R3 பைக், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.8 வினாடிகளில் எட்டிவிடும். இதன்மூலம் 7.2 வினாடிகள் என்ற பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 320d காரை காட்டிலும், யமஹா YZF-R3 மிக வேகமானதாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
5 Cheapest bikes faster than a bmw car. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X