வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக ஒற்றை காலில் தவம் கிடப்பவரா நீங்கள்?

விருப்பமான பைக்கை புக்கிங் செய்து விட்டு, அதை டெலிவரி எடுப்பதற்காக நீண்ட காலம் காத்திருப்பது என்பது வலி மிகுந்தது.

விருப்பமான பைக்கை புக்கிங் செய்து விட்டு, அதை டெலிவரி எடுப்பதற்காக நீண்ட காலம் காத்திருப்பது என்பது வலி மிகுந்தது. தற்போதைய சூழலில் சில ராயல் என்பீல்டு பைக்குகள், நீண்ட வெயிட்டிங் பீரியட்டை கொண்டிருக்கின்றன. அந்த பைக்குகள் குறித்தும், ஒரு வேளை வெயிட்டிங் பீரியட்டை பார்த்து விட்டு உங்கள் மனம் மாறினால், அதற்கு மாற்றாக எந்த பைக்கை தேர்வு செய்யலாம்? என்பது குறித்தும் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் (Royal Enfield Thunderbird 350X)

சராசரி வெயிட்டிங் பீரியட்: 1.5-3 மாதங்கள்

ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து வெளிவரும் ஸ்ட்ரீட் (Street)/சிட்டி (City) ப்ரெண்ட்லி பைக் இது. இந்த பைக்கை டெலிவரி எடுக்க வேண்டுமென்றால், 1.5-3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். 1.5-3 மாதங்கள் என்பது மிக அதிகம்.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

எனவே இதற்கு சிறந்த மாற்றாக உள்ள யமஹா எப்இஸட் 25 பைக்கை வாங்குவது பற்றி யோசிக்கலாம். இத்தனைக்கும் தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்குடன் ஒப்பிடுகையில், யமஹா எப்இஸட் 25 பைக்கின் விலை வெகுவாக குறைவு. அதே நேரத்தில் இதன் சக்தியும் குறைவுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 500எக்ஸ் (Royal Enfield Thunderbird 500X)

சராசரி வெயிட்டிங் பீரியட்: 1.5-3 மாதங்கள்

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்கிற்கும், தண்டர்பேர்டு 500எக்ஸ் பைக்கிற்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் இன்ஜின் மட்டும்தான். நீண்ட வெயிட்டிங் பீரியட் மட்டும்தான் இந்த பைக்கிற்கு இருக்கும் ஒரே ஒரு குறையாக கருதப்படுகிறது.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்கை போலவே, தண்டர்பேர்டு 500எக்ஸ் பைக்கையும் டெலிவரி எடுக்க சுமார் 1.5-3 மாதங்கள் காத்திருக்க வேண்டும். எனவே இதற்கு பதிலாக பஜாஜ் டோமினார் பற்றி யோசிக்கலாம்.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

டோமினார் பைக்கில் அதிக சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தண்டர்பேர்டு 500எக்ஸ் பைக்கை காட்டிலும், டோமினார் பைக்கை பராமரிப்பதும் எளிது. நெடுஞ்சாலைகளில் லாங் டிரிப் அடிப்பதாகட்டும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதாகட்டும், இரண்டிற்கும் ஏற்ற பைக் டோமினார்.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350)

சராசரி வெயிட்டிங் பீரியட்: 2-3 மாதங்கள்

இந்தியாவின் பிரீமியம் செக்மெண்ட்டில், அதிகம் விற்பனை செய்யப்படும் பைக் ராயல் என்பீல்டு கிளாசிக் 350. இதுதவிர ராயல் என்பீல்டு லைன் அப்பிலேயே அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகவும் கிளாசிக் 350 திகழ்கிறது.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கிற்கு சிறந்த மாற்றாக கிளாசிக் 350 பைக் கருதப்படுகிறது. என்றாலும் கிளாசிக் 500 உடன் ஒப்பிடுகையில், கிளாசிக் 350 பைக் சற்றே சக்தி குறைந்ததுதான். ஆனால் கிளாசிக் 350 பைக்கை வாங்க வேண்டுமானால் சராசரியாக 2-3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் நிறத்தை பொறுத்து, 6 மாதங்கள் வரை காத்திருங்கள் என சில சமயங்களில் டீலர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே கிளாசிக் 350 பைக்கிற்கு மாற்றாக பஜாஜ் அவென்ஜர் க்ரூஸ் 220 பைக்கை தேர்வு செய்யலாம். இதற்கு வெயிட்டிங் பீரியட்டே இல்லை.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 (Royal Enfield Classic 500)

சராசரி வெயிட்டிங் பீரியட்: 1-2 மாதங்கள்

ராயல் என்பீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 650 இரட்டையர்களை இந்தியாவில் வெகு விரைவில் களமிறக்கவுள்ளது. ஆனால் அது வரை, கிளாசிக் 500 பைக்தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதன்மையான மாடலாக திகழ போகிறது.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் இன்ஜின் அதிக சக்தி வாய்ந்தது. ஆனால் கிளாசிக் 350 பைக்கை போலவே, கிளாசிக் 500 பைக்கிற்கும் வெயிட்டிங் பீரியட் அதிகமாக உள்ளது. அதாவது ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கிற்கு சராசரியாக 1-2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

கிளாசிக் 350 உடன் ஒப்பிடுகையில், கிளாசிக் 500 பைக்கிற்கான வெயிட்டிங் பீரியட் சற்று குறைவுதான். என்றாலும் கிளாசிக் 500 பைக்கின் போட்டியாளர்கள் மிக வேகமாக பைக்குகளை டெலிவரி செய்கின்றனர். எனவே கிளாசிக் 500 பைக்கிற்கு சிறந்த மாற்றாக யுஎம் ரெனகேட் கமாண்டோ பைக்கை கருதலாம்.

வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என நீண்ட காலமாக தவம் கிடப்பவரா நீங்கள்?

விலை, லுக், இன்ஜினின் சக்தி ஆகியவற்றில் 2 பைக்குகளும் கிட்டத்தட்ட ஒன்று போலவே உள்ளன. ஆனால் வெயிட்டிங் பீரியட் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் இரண்டு பைக்குகளும் வேறுபடுகின்றன. ஆம், யும் ரெனகேட் கமாண்டோ பைக்கை புக்கிங் செய்த ஒரு வார காலத்திற்குள்ளாக டெலிவரி எடுத்து விட முடியும்.

குறிப்பு: நகரம் மற்றும் டீலர்ஷிப்களை பொறுத்து வெயிட்டிங் பீரியட் மாறுபடலாம்.

Most Read Articles

ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம். இந்தியாவில் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் அறிமுகமான முதல் ராயல் என்பீல்டு பைக் இதுதான்.

English summary
Royal Enfield Motorcycles Waiting Periods and Alternatives. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X