திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்.. இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா!

2020ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பிரச்னை தலை விரித்தாடி வந்தநிலையிலும் புதுமுக வாகனங்களின் அறிமுகம் தடையின்றி செய்யப்பட்டு வந்தது. அந்தவகையில், விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள் பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

2020ம் ஆண்டு நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த வருடத்தில் அரங்கேறிய முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்கும் தருணம் இது. அந்தவகையில், இந்த ஆண்டில் விற்பனைக்கு வந்த பிரபல நிறுவனங்களின் ஸ்கூட்டர்களையும், அவற்றின் சிறப்புகள் பற்றிய தகவலையுமே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

இந்தியாவில் பைக்குகளைப் போல ஸ்கூட்டர்களுக்கும் நல்ல சந்தை நிலவி வருகின்றது. எனவேதான் இங்கு பைக்குகளைக் காட்டிலும் புது முக ஸ்கூட்டர்களின் அறிமுகமே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அதேசமயம், நடப்பாண்டு அனைத்துத் துறைகளுக்குமே சோதனையான ஆண்டாக இருந்தாதல் கணிசமான எண்ணிக்கையிலேயே ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அவற்றில் சில பெஸ்ட் தயாரிப்புகளைப் பற்றியே கீழே காணவிருக்கின்றோம்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

ஹோண்டா ஆக்டிவா 6ஜி

ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஆக்டிவா இருக்கின்றது. இந்த மாடலின் 6ஜி வெர்ஷனையே ஹோண்டா நிறுவனம் 2020ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. குறிப்பிட்ட சில மாற்றங்களுடன் இந்த ஸ்கூட்டரை களமிறக்கியது. டிசைன், புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி, திறன் வாய்ந்த எஞ்ஜின் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடனேயே அது அறிமுகமானது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் ரூ. 67,392 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த ஸ்கூட்டரில் பிஎஸ்6 திறன் கொண்ட 110 சிசி எஞ்ஜினையே ஹோண்டா பயன்படுத்தி வருகின்றது. இது அதிகபட்சமாக 7.6 பிஎச்பி மற்றும் 8.8 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

டிவிஎஸ் ஐக்யூப்:

டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் ஐக்யூப். இதையே தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் இந்தாண்டு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதற்கு ரூ. 1.15 லட்சம் என்ற விலையை அது நிர்ணயித்தது. இது ஓர் பிரீமியம் தரத்திலான மின்சார ஸ்கூட்டராகும். தமிழகத்தில் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டாலும் தற்போது பெங்களூருவில் மட்டுமே டிவிஎஸ் விற்பனைச் செய்து வருகின்றது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

இந்த ஸ்கூட்டரில் 2.25kWh திறன் கொண்ட பேட்டரியே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ வேகம் ஆகும். இதனை 4.4kWh திறன் கொண்ட மின் மோட்டார் வெளிப்படுத்தும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக்:

2020ல் வெளிவந்த மின்சார ஸ்கூட்டரில் இதுவும் ஒன்று. பஜாஜ் நிறுவனம் நீண்ட ஆண்டுகள் கழித்து அறிமுகம் செய்த ஸ்கூட்டரும் இதுவே ஆகும். இந்த ஸ்கூட்டரை நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் இது விற்பனைக்கு வழங்கி வருகின்றது. பெங்களூரு மற்றும் புனே ஆகிய இரு நகரங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 1 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

இந்த மின்சார ஸ்கூட்டரில் 4kW திறன் கொண்ட மின் மோட்டாரை பஜாஜ் பயன்படுத்தியுள்ளது. இத்துடன், இதற்கான மின்சார திறனை லித்தியம் அயன் பேட்டரி மூலம் வழங்கும்படி வடிவமைத்துள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ வேகம் ஆகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

ஏத்தர் 450 எக்ஸ்:

இந்தாண்டில் விற்பனைக்கு வந்த மற்றுமொரு மின்சார ஸ்கூட்டர் இதுவாகும். தற்போது சென்னையில் விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய மின்சார ஸ்கூட்டராக இது இருக்கின்றது. ஆரம்பத்தில் பெங்களூருவில் மட்டுமே கிடைத்து வந்த இந்த மின்சார ஸ்கூட்டர் தற்போது சென்னையிலும் கிடைக்கும்படி செய்திருக்கின்றது அதன் தயாரிப்பு நிறுவனம்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

விரைவில் நாட்டின் மிக முக்கியமான 11 நகரங்களிலும் இது விற்பனைக்கு வரவிருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டர் பிரீமியம் தரத்திலான வாகனம் என்பதால் இதன் விலை ரூ. 1.27 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதில் எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகளை ஏத்தர் வழங்கி வருகின்றது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ்:

வெஸ்பா நிறுவனம் இந்த ஸ்கூட்டரை லிமிடெட் எடிசனிலேயே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த நிறுவனம் நடப்பாண்டில் அறிமுகம் செய்த தரமான ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்றாகும். இதனை ரேஸிங் சிக்ஸ்டீஸ் எனும் பிரபல மாடலை தழுவி வெஸ்பா வடிவமைத்திருப்பதே ஸ்கூட்டரின் சிறப்பாக அமைந்திருக்கின்றது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் வெர்ஷனின் விலை ரூ. 1.20 லட்சம் ஆகும். இது லிமிடெட் எடிசன் என்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். புதிய தோற்றம், பல்வேறு காஸ்மெடிக் அப்டேட் ஆகியவற்றுடன் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தகுந்தது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

யமஹா ரே-இசட்ஆர் 125:

யமஹா நிறுவனத்தின் இந்த ஆண்டு அறிமுகமாக ரே-இசட்ஆர் 125 இருக்கின்றது. 113 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை ரீபிளேஸ் செய்யும் விதமாக யமஹா இந்த 125சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை அப்கிரட் செய்து அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் ரூ. 74,330 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றுத. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160:

அப்ரில்லா நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்கூட்டரே எஸ்எக்ஸ்ஆர் 160. இதனை மிக சமீபத்திலேயே அப்ரில்லா நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் தொடங்கியது. மேக்ஸி ரக ஸ்டைலில் காட்சியளிக்கும் இந்த ஸ்கூட்டரில் 160சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய எஞ்ஜினை அப்ரில்லா பயன்படுத்தியுள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ல் விற்பனைக்கு வந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்... என்ன இத்தன ஸ்கூட்டர் இந்த வருஷம் அறிமுகமாச்சா?

இதில், 10.5 பிஎச்பி மற்றும் 11.6 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக விரைவில் இதன் டெலிவரி தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த ஸ்கூட்டர் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமான வாகனமாகும்.

Most Read Articles

English summary
Best Scooter Launches In India In 2020: Top Scooters List. Read In Tamil.
Story first published: Saturday, December 19, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X