ஐரோப்பிய நாடு ஒன்றில் விற்பனை செய்யப்படும் ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் இது...!

ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் எம்சிஎச் ஸ்க்ரம்ப்ளர் பைக் ராயல் எண்ட்பீல்டு டீலர்களால் சில மாடிஃபைடு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் பைக்கை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஐரோப்பிய நாடு ஒன்றில் விற்பனை செய்யப்படும் ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் இது...!

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் இண்டர்செப்டர் 650 இந்தியாவை காட்டிலும் வெளிநாட்டு சந்தைகளில் குறிப்பாக ஐரோப்பிய நாட்டு சந்தைகளில் பிரபலமான பைக் மாடலாக உள்ளது. இதில் ஒரு ஐரோப்பிய நாடான லட்வியாவில் ராயல் எண்ட்பீல்டு டீலர்ஷிப் ஒன்று இண்டர்செப்டர் மாடலின் கஸ்டம்-வெர்சனை வழக்கமான மாடலை காட்டிலும் 2530 யூரோ (ரூ.2,10,000) அதிகமாக விற்பனை செய்து வருகிறது.

ஐரோப்பிய நாடு ஒன்றில் விற்பனை செய்யப்படும் ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் இது...!

ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் பைக் மாடலை இவ்வாறு எம்சிஎச் ஸ்க்ரம்ப்ளர் தோற்றத்திற்கு மாற்றியுள்ள லாட்வியா நாட்டின் டீலர்ஷிப்பின் பெயர் மோட்டோ கிளாசிக் ஹௌஸ் ஆகும். வழக்கமான கஸ்டமைஸ்ட் பாகங்களுடன் ஜார்ட் ஸ்க்ரம்ப்ளர் எக்ஸாஸ்ட், என்ஜின் இசியு பூஸ்டர், மோட்டோக்ராஸ் பைக் ஹேண்டில்பார் உள்ளிட்ட மார்க்கெட்டிற்கு பிறகு கிடைக்கும் பாகங்களும் இந்த பைக்கிற்கு மாடிஃபைடு மாற்றங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடு ஒன்றில் விற்பனை செய்யப்படும் ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் இது...!

இதில் ஜார்ட் ஸ்க்ரம்ப்ளர் எக்ஸாஸ்ட் மூலமாக பைக் 12 கிலோ வரையில் எடை இழப்பை அடைந்துள்ளது. வழக்கமான ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் பைக்கின் கெர்ப் எடை 202 கிலோ மற்றும் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 174மிமீ ஆகும்.

ஐரோப்பிய நாடு ஒன்றில் விற்பனை செய்யப்படும் ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் இது...!

சஸ்பென்ஷன் அமைப்பாக 41மிமீ முன்புற ஃபோர்க்ஸ் 110மிமீ ட்ராவல் உடனும், பின்புறத்தில் ட்வின் காயில்-ஓவர் ஷாக்ஸ் 88மிமீ ட்ராவல் உடனும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் வழக்கமான 648சிசி இணையான-இரட்டை, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட், ஏர்-ஆயில் கூல்டு மோட்டார் தான் இந்த மாடிஃபைடு பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடு ஒன்றில் விற்பனை செய்யப்படும் ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் இது...!

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,100 ஆர்பிஎம்-ல் 47 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 110/80-18 என்ற அளவில் உள்ள முன்புற டயருடனும், 100/90-18 என்ற அளவில் உள்ள பின்புற டயருடனும் மிச்செலின் அனகீ ட்யூல்-பர்பஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடு ஒன்றில் விற்பனை செய்யப்படும் ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் இது...!

வழக்கமான இண்டர்செப்டர் 650 பைக்கில் முன்புறத்தில் 100/90-18 அளவிலும், பின்புறத்தில் 130/70-18 என்ற அளவிலும் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க 320மிமீ ஃப்லோட்டிங் டிஸ்க் முன் சக்கரத்திலும், 240மிமீ யூனிட் பின் சக்கரத்திலும் போஸ்ச் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடு ஒன்றில் விற்பனை செய்யப்படும் ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் இது...!

குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் எம்சிஎச் ஸ்க்ரம்ப்ளர் பைக்கின் விலை அந்த டீலர்ஷிப்பில் 9380 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் மதிப்பு 7.70 லட்சமாகும்.

ஐரோப்பிய நாடு ஒன்றில் விற்பனை செய்யப்படும் ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் இது...!

இந்தியாவில் ரூ.2.64 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 மாடல் இந்த கஸ்டமைஸ்ட் பைக் விற்பனை செய்யப்பட்டு வரும் லாட்வியா நாட்டில் ரூ.5.63 லட்சம் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Meet The Limited-Edition Royal Enfield Interceptor MCH Scrambler
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X