மீண்டும் பல்சர் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!! புதிய விலைகளை தெரிஞ்சிக்கோங்க..!

பல்சர் பைக்குகளின் விலைகளை கணிசமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் பல்சர் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!! புதிய விலைகளை தெரிஞ்சிக்கோங்க..!

2021-22ஆம் நிதியாண்ட்டை பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை அதிகரிப்புடன் துவங்கியுள்ளன. இந்த வகையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பல்சர் பைக்குகளின் விலைகளை சிறிய அளவில் அதிகரித்துள்ளது.

மீண்டும் பல்சர் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!! புதிய விலைகளை தெரிஞ்சிக்கோங்க..!

125சிசி-யில் இருந்து 220சிசி வரையில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்குகள் விற்பனையில் உள்ளன. இதில் ஆர்எஸ்200 பைக்கை தவிர்த்து மற்ற பல்சர் பைக்குகள் அனைத்தின் விலைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக ரூ.1,747, 1748 என்றே உயர்த்தப்பட்டுள்ளன.

மீண்டும் பல்சர் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!! புதிய விலைகளை தெரிஞ்சிக்கோங்க..!

பல்சர் 220எஃப் மற்றும் என்எஸ்200 பைக்குகளின் விலைகள் மட்டும் சற்று வித்தியாசமாக ரூ.3,002 மற்றும் ரூ.2,004 என அதிகரிக்கப்பட்டுள்ளன. இனி பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆரம்ப விலையே ரூ.73,363 ஆகும்.

மீண்டும் பல்சர் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!! புதிய விலைகளை தெரிஞ்சிக்கோங்க..!

அதிகப்பட்சமாக ரூ.1,52,179 (மாற்றமில்லை) பல்சர் ஆர்எஸ்200 பைக் விற்பனை செய்யப்படுகிறது. பிரபலமான பல்சர் 220எஃப் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை இனி ரூ.1,28,250 ஆகும்.

மீண்டும் பல்சர் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!! புதிய விலைகளை தெரிஞ்சிக்கோங்க..!

பல்சர் 125 பைக் ட்ரம் & டிஸ்க் ப்ரேக் தேர்வுகளுடன் பிளவுப்பட்ட இருக்கை வெர்சனிலும் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றிற்கு தனித்தனியாக ஒவ்வொரு விலையாகும். 150, 150 நியான், 150 இரட்டை டிஸ்க் என்ற மூன்று விதமான வெர்சன்களில் 150சிசி பல்சர் பைக்குகள் கிடைக்கின்றன.

மீண்டும் பல்சர் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!! புதிய விலைகளை தெரிஞ்சிக்கோங்க..!

இவற்றின் புதிய விலைகள் ரூ.95,872- ரூ.1,04,819 வரையில் நிர்ணயிக்கப்பட்ட்டுள்ளன. முன்பு விற்பனையில் இருந்த 180எஃப் பைக்கிற்கு மாற்றாக புதிய பல்சர் 180 சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் பல்சர் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!! புதிய விலைகளை தெரிஞ்சிக்கோங்க..!

பல்சர் என்எஸ் வரிசையில் 160சிசி மற்றும் 200சிசி-களில் மோட்டார்சைக்கிள்கள் கிடைக்கின்றன. ஆனால் ஆர்எஸ்-இல் 200சிசி-யில் மட்டும் தான் உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் பல்சர் 220எஃப் இளைஞர்களின் பெரும் ஆதரவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மீண்டும் பல்சர் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!! புதிய விலைகளை தெரிஞ்சிக்கோங்க..!

இதோடு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நிறுத்தி கொள்ள போவதில்லை. 250சிசி-யிலும் பல்சர் பைக்கை கொண்டுவர திட்டமிட்டு வருகிறது. மேலும், இந்த புதிய 250சிசி பைக்கில் அதிகப்பட்சமாக 24- 25பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு (ஆயில்-கூலர் உடன்) என்ஜின் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

English summary
Bajaj Pulsars Get More Expensive. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X