நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகளின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

இந்தியாவில் நடப்பாண்டு நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 350 சிசி மோட்டார்சைக்கிள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வழக்கம் போல ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் நடப்பாண்டு நவம்பர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 19,601 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 39,391 ஆக இருந்தது. இது 50.24 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு நவம்பர் மாதம் 19,790 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

இருப்பினும் இதன் விற்பனை எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த பட்டியலில் அதே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 6,513 புல்லட் 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 8,733 ஆக உயர்ந்துள்ளது.

நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு நவம்பர் மாதம் 2,220 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. சதவீத அடிப்படையில் பார்த்தால் இது 34.09 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு நவம்பர் மாதம் 6,775 மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 7,031 ஆக இருந்தது. இது 3.64 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 256 என்ற எண்ணிக்கையில் மீட்டியோர் 350 பைக்குகளை குறைவாக விற்பனை செய்துள்ளது.

நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலக்ட்ரா 350 நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 3,490 எலக்ட்ரா 350 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 4,257 ஆக உயர்ந்துள்ளது. இது 21.98 சதவீத வளர்ச்சியாகும்.

நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு நவம்பர் மாதம் 767 எலக்ட்ரா 350 பைக்குகளை அதிகமாக விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் 5வது மற்றும் கடைசி இடத்தை ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பிடித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் நடப்பாண்டு நவம்பர் மாதம் 2,322 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 4,067 ஆக இருந்தது. இது 42.91 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 1,745 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை குறைவாக விற்பனை செய்துள்ளது. 350 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம்தான் மிக நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

அதை நிரூபிக்கும் வகையில் மீண்டும் ஒரு முறை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. தற்போதைய நிலையில் இந்த செக்மெண்ட்டில் எந்த நிறுவனத்தாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

நிறைய நிறுவனங்கள் கடந்த காலங்களில் இதற்கான முயற்சிகளை எடுத்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவை எதுவும் பலன் அளிக்கவில்லை. ஹோண்டா நிறுவனம் தற்போது ஹைனெஸ் சிபி350 மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்களுக்கு சவால் அளித்து வருகிறது.

நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான 350 சிசி பைக்குகள்... முதலிடத்தில் இருக்கும் மாடல் எதுன்னு தெரியுமா?

தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் சாதாரண டீலர்ஷிப்கள் வாயிலாக ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்படுவதில்லை. மாறாக ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் ஹோண்டா நிறுவனத்தின் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 16, 2021, 21:40 [IST]
English summary
Top 5 350cc motorcycles november 2021 royal enfield classic 350 leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+