விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

விபத்திற்குள்ளான ஆர்15 பைக் ஒன்று, யமஹாவின் பிரபலமான ஆர்1 எம் பைக்கின் தோற்றத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவினை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

யமஹாவின் 1000சிசி மோட்டார்சைக்கிளான ஆர்1 தான் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஆர்15 வி3.0 பைக்கிற்கு அடிப்படை மாடல் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

ஏனெனில் டிசைன் & ஸ்டைல் உள்ளிட்டவை இந்த 155சிசி பைக்கிற்கு அந்த 1000சிசி பைக்கில் இருந்துதான் பெறப்பட்டது. இதனால் ஆர்15 பைக்கின் தோற்றத்தை பிடிக்காதவர்களே நிச்சயம் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.

விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஸ்டைலிஷான தோற்றத்தில் காட்சியளிப்பதால் ஆர்15 பைக்கை மாடிஃபை செய்வதையும் அவ்வளவாக பார்க்க முடிவதில்லை. ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ளது, மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஆர்15 பைக்கை பற்றி தான்.

விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

ஏனெனில் இந்த ஆர்15 பைக் விபத்தில் சிக்கியதினால் இதன் உரிமையாளர் இவ்வாறான மாடிஃபை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளார். விபத்தில் பைக்கின் முன் பகுதி முழுவதும் சிதைந்துவிட்டது. இடது பக்கத்தில் ஃபைரிங் இல்லை, விபத்தில் இது கழன்று விழுந்திருக்கலாம்.

விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

கியரை மாற்றும் பெடல் வளைந்து போனது. இவற்றுடன் பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் சேதமடைந்ததாக அயுஸ் வெர்மா என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள கீழுள்ள வீடியோவில் பைக்கின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த வீடியோவில் யமஹா ஆர்1எம் பைக்கிற்கு இணையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டதற்கு பிறகு இந்த ஆர்15 பைக் எப்படியுள்ளது என்பதையும் பார்க்கலாம். இதற்காக பல புதிய உடற் தொகுப்புகளை இந்த பைக் பெற்றுள்ளது.

விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

இதில் ஃபைரிங், பின்பக்க கௌல், பக்கவாட்டு பேனல்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த பாடி பேனல்கள் அனைத்தும் முதலில் வெள்ளை நிறத்தில் இருப்பதை வீடியோவில் பார்க்கலாம். அதன் பின்னரே மேட் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

சேதமடைந்த பாகங்களுக்கு மாற்றாக புதிய பாடி பேனல்கள் பொருத்தப்பட்ட பிறகு பைக் புத்துணர்ச்சியான தோற்றத்தை பெற்றுள்ளது. அதேநேரம் ஸ்டாக் ஆர்15 பைக்கை காட்டிலும் வித்தியாசமான தோற்றத்தை ஏற்றுள்ளது.

விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

குறிப்பாக இரட்டை எல்இடி டிஆர்எல்கள் உடன் இரட்டை-ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களினால் மீனின் கண் போன்றதான தோற்றத்தை பெற்றுள்ள இந்த பைக்கின் முன்பகுதி தான் நமக்கு யமஹா ஆர்1 எம் பைக்கை ஞாபகப்படுத்துகிறது.

விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

பின்பக்க கௌல் காற்று துளைகளை பெற்றுள்ளது. இதுவும் பைக்கின் கூடுதல் ஸ்போர்டியான தோற்றத்திற்கு காரணமாகும். இருப்பினும் இது இந்த மாடிஃபை பைக்கின் பக்கவாட்டு தோற்றத்துடன் ஒத்து போகவில்லை என்பதை கூறிதான் ஆக வேண்டும்.

விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

பின் கௌலின் வடிவத்தினை இன்னமும் சற்று மெல்லியதாக கொண்டுவந்திருக்கலாம். முன்பக்கத்தை போல் பின்பக்க டெயில்லேம்ப் அமைப்பிலும் சதுர வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்கள் வித்தியாசமான நிறத்திலான டிஆர்எல்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளன.

விபத்தில் சிதைந்துப்போன யமஹா ஆர்15 பைக்கா இப்படி இருக்கு!! மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்...

மற்றப்படி புதிய எக்ஸாஸ்ட் குழாயை தவிர்த்து பைக்கின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் வழங்கப்படவில்லை. பாடி பேனல்கள் கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளதா என்பது உரிமையாளருக்கு மட்டுமே தெரியும். வீடியோவில் அவர் புதிய பாடி பேனல்களின் தரம் நல்லப்படியாக இருப்பதாகவே கூறுகிறார்.

Most Read Articles

English summary
Accidental Yamaha R15 Rebuilt to Resemble Yamaha R1M - VIDEO.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X