ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா...?

அமெரிக்கன் ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவி, பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட இந்நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்கள் முறையே ரூ.8.04 லட்சம் மற்றும் ரூ.8.54 லட்சத்தை ஆரம்ப விலையாக பெற்றுள்ளன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த புதிய பிஎஸ்6 மாடல் அதன் முந்தைய மாடலில் இருந்து எந்த காஸ்மெட்டிக் மாற்றத்தையும் பெறவில்லை. இதனால் இந்த பிஎஸ்6 மாடலில் அதிக அடர்த்தியில் ஒளியை வெளிப்படுத்தக்கூடிய ஹெட்லைட்ஸ், எல்இடி டிஆர்எல்கள், ஆட்டோமேட்டிக் வைபர்ஸ், 16-இன்ச்சில் அலாய் சக்கரங்கள், ரூஃப் ரெயிலின் டிசைன் உள்ளிட்டவை அப்படியே தொடர்ந்துள்ளன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா...?

இதேபோன்று உட்புறத்திலும், லெதர் இருக்கைகள், பல கட்டுப்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்ககூடிய எட்டு இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவற்றிலும் எந்த மாற்றமும் இல்லை.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா...?

2020 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இரு என்ஜின் தேர்வுகளை பெற்றுள்ளது. இதில் 1.5 லிட்டர், மூன்று-சிலிண்டர், டிஐ-விசிடி பெட்ரோல் என்ஜின் 118 பிஎச்பி பவரையும் 149 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது. இந்த என்ஜினிற்கு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா...?

இரண்டாவது என்ஜின் தேர்வான 1.5 லிட்டர், டிடிசிஐ டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 98 பிஎச்பி பவர் மற்றும் 215 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா...?

இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், முன்புறத்தில் இரு காற்றுப்பைகள், ஓட்டுனர் மற்றும் பயணிகளின் சீட்-பெல்ட்டை நினைவூட்டும் அலாரம், தானியங்கி க்ராஷ்-அன்லாக் அமைப்பு, தானியங்கி டோர் லாக்ஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அதிவேகத்தை எச்சரிக்கும் அமைப்பு உள்ளிட்டவை பாதுகாப்பு அம்சங்களாக இந்த பிஎஸ்6 காரில் உள்ளன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா...?

சர்வீஸ் கால இடைவெளியாக இந்த புதிய பிஎஸ்6 காருக்கு 10,000 கிமீ-ஐ ஃபோர்டு நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதுமட்டுமின்றி மூன்று வருடம் அல்லது 1 லட்ச கிமீ தூரம் (எது முதலில் வருகிறதோ) என்கிற சர்வீஸ் கால இடைவெளியையும் இந்நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் மாடல்களுக்கு நிலையாக வழங்கி வருகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா...?

இவற்றுடன் பின்புற ஸ்பாய்லர், கூடுதல் சக்கரத்திற்கு கவர், காரின் வேகத்தை குறைக்காதவாறு எதிர்வரும் காற்றை பிரிப்பான் மற்றும் க்ரோம் எக்ஸாஸ்ட் உள்ளிட்ட வெளிப்புற ஆக்ஸஸரீஸ்களையும் இந்த பிஎஸ்6 காருக்கு ஃபோர்டு நிறுவனம் வழங்கவுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா...?

உட்புற ஆக்ஸஸரீஸ்களாக, வினைல் சீட் கவர்ஸ், எஸ்எஸ் ஸ்கஃப் ப்ளேட்கள், ஒளியூட்டப்பட்ட ஸ்கஃப் ப்ளேட்கள், கார்பேட்டில் தயாரிக்கப்பட்ட கால் மிதிப்பான், ட்ரங்க் மேட், சன் ப்ளைண்ட்ஸ், சுற்றிலும் பொருத்தக்கூடிய விளக்குகள் மற்றும் பின்புற இருக்கைகளில் அமர்வோருக்கு பொழுதுபோக்கிற்காக தொடுத்திரைகள் போன்றவை கொடுக்கப்படவுள்ளன.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது... ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா...?
EcoSport 1.5 Petrol BS6 Price BS4 Price
Ambiente MT Rs 8,04,000 Rs 7,91,000
Trend MT Rs 8,84,000 Rs 8,71,000
Titanium MT Rs 9,63,000 Rs 9,50,000
Titanium MT Thunder Rs 10,53,000 Rs 10,40,000
Titanium+ MT Rs 10,53,000 Rs 10,40,000
Titanium+ MT Sports Rs 11,08,000 NA
Titanium+ AT Rs 11,43,000 Rs 11,30,000
EcoSport 1.5 Diesel BS6 Price BS4 Price
Ambiente MT Rs 8,54,000 Rs 8,41,000
Trend MT Rs 9,34,000 Rs 9,21,000
Titanium MT Rs 9,99,900 Rs 9,99,900
Titanium MT Thunder Rs 11,03,000 Rs 10,90,000
Titanium+ MT Rs 11,03,000 Rs 10,90,000
Titanium+ MT Sports Rs 11,58,000 Rs 11,45,000

புதிய ஈக்கோஸ்போர்ட் பிஎஸ்6 மாடலின் 13 வேரியண்ட்களில் 11 வேரியண்ட்கள் வெறும் 13,000 மட்டுமே விலை அதிகரிப்பாக பெற்றுள்ளன. இதிலிருந்து பிஎஸ்6 மாடல்களின் விலை நிர்ணயிக்கும் பணிகளில் ஃபோர்டு நிறுவனம் சிறப்பாக பணியாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பிஎஸ்4 மாடலை போல ஈக்கோஸ்போர்ட்டின் பிஎஸ்6 மாடலும் விற்பனையில் எந்தவொரு சரிவையும் சந்திக்காது என நம்புவோம்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford EcoSport BS6 Models Launched Starting At Rs 8.04 Lakh
Story first published: Tuesday, January 21, 2020, 16:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X