இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு தீவிரமாக தயாராகும் ஹூண்டாய் ஐ20 என்..!! மீண்டும் சோதனை ஓட்டம்

சில மாதங்களுக்கு முன்பு ஹூண்டாய் நிறுவனம் செயல்திறன்மிக்க அதன் என் வரிசை கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது. இதன்படி முதல் ஹூண்டாய் என் வரிசை மாடலாக, விற்பனையில் உள்ள ஐ20 ஹேட்ச்பேக்கின் ஆற்றல்மிக்க வெர்சன் வெளிவரவுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு தீவிரமாக தயாராகும் ஹூண்டாய் ஐ20 என்..!! மீண்டும் சோதனை ஓட்டம்

இதற்கிடையில் ஐ20 என் கார் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியன் ஆட்டோஸ் ப்ளாக் செய்திதளத்தின் மூலமாக ஹூண்டாய் ஐ20 என் லைன் காரின் சோதனை மாதிரி ஒன்று ஹரியானாவில், நெடுஞ்சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு தீவிரமாக தயாராகும் ஹூண்டாய் ஐ20 என்..!! மீண்டும் சோதனை ஓட்டம்

இந்த சோதனையில் மணிக்கு 120கிமீ வேகத்தில் சோதனை கார் இயக்கி பார்க்கப்பட்டதாகவும், அதற்காகவே நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த சோதனை ஐ20 என் கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு தீவிரமாக தயாராகும் ஹூண்டாய் ஐ20 என்..!! மீண்டும் சோதனை ஓட்டம்

இருப்பினும் காரின் வடிவம் மற்றும் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் அளவில் பெரிய அளவில் அலாய் சக்கரங்களை வைத்து இது ஐ20 என் கார் என்பதை எளிதாக கண்டுப்பிடித்துவிடலாம். இவற்றுடன் சற்று வித்தியாசமான உடற் பாகங்களையும் இந்த செயல்திறன்மிக்க கார் பெற்றுவரவுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு தீவிரமாக தயாராகும் ஹூண்டாய் ஐ20 என்..!! மீண்டும் சோதனை ஓட்டம்

இந்த உடற்பாகங்களில் முன்பக்கத்தில் பெரிய க்ரில், பெரிய காற்று ஏற்பான் உடன் திருத்தியமைக்கப்பட்ட பம்பர், முன்பக்க க்ரில்லில் 'என்-லைன்' முத்திரை, புதிய பக்கவாட்டு அடிப்பகுதி மற்றும் சைடு சில்ஸ் உள்ளிட்டவற்றுடன் காரை சுற்றிலும் பளிச்சிடும் பாகங்கள் அடங்குகின்றன.

இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு தீவிரமாக தயாராகும் ஹூண்டாய் ஐ20 என்..!! மீண்டும் சோதனை ஓட்டம்

இவற்றை போல் காரின் உட்புற கேபினும் வழக்கமான ஐ20 ஹேட்ச்பேக்கில் இருந்து ஐ20 என் காரில் வித்தியாசமாகவே இருக்கும். இவ்வாறான காஸ்மெட்டிக் மாற்றங்களுடன், செயல்திறன்மிக்க கார் என்பதை நியாயப்படுத்தும் வகையில் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் போன்ற இயந்திர பாகங்களும் ஐ20 என்-லைனில் அப்கிரேட்டாகவே வழங்கப்படும்.

இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு தீவிரமாக தயாராகும் ஹூண்டாய் ஐ20 என்..!! மீண்டும் சோதனை ஓட்டம்

ஆனால் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஹூண்டாய் ஐ20 என்-வரிசை காரில் தற்போதைய ஐ20 காரின் அதே 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு தீவிரமாக தயாராகும் ஹூண்டாய் ஐ20 என்..!! மீண்டும் சோதனை ஓட்டம்

ஆனால் ஐ20 என்-இல் இந்த என்ஜின் எத்தகைய ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது தற்போதைக்கு தெரியவில்லை. ஸ்டாண்டர்ட் மாடலை காட்டிலும் சற்று ப்ரீமியம் தரத்திலான பயண அனுபவத்திற்காக என்ஜின் வழங்கும் ஆற்றல் சற்று அதிகரிக்கப்படலாம்.

இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு தீவிரமாக தயாராகும் ஹூண்டாய் ஐ20 என்..!! மீண்டும் சோதனை ஓட்டம்

ஹூண்டாய் ஐ20 என்-லைன் இந்தியாவில் அறிமுகமாகுவது உறுதி. இந்த கார் அன்றாடம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை காட்டிலும் இந்திய கார் ஆர்வலர்களை அதிகளவில் ஈர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai i20 N-Line Spotted Testing Once Again: Here Are All The Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X