மாருதி கார்கள் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் தொழில்நுட்பத்துடன் அறிமுகம்

By Ravichandran

மாருதி நிறுவனம் ஏர்பேக்ஸ் மற்றும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் பட்ஜெட் கார்களை அறிமுகம் செய்கிறது.

நீண்ட காலமாகவே கார்களில், பாதுகாப்பு அம்சங்கள் ஒரு பெரிய குறைபாடாகவே இருந்தது. அது இப்போது தீவிரமாக கவனத்தில் கொள்ளப்பட்டு, அதற்கான தீர்வுகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மாருதி சுசுகி மற்றும் பல சர்வதேச கார் நிறுவனங்களின் தயாரிப்புகள், கிராஷ் டெஸ்ட் எனப்படும் மோதல் சோதனைகளில் தோல்வி அடைந்திருந்தன. இந்தநிலையில், இந்தியாவில் கார்களின் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பதற்கான முயற்திகள் தீவிரமடைந்துள்ளன.

2017 முதல் வாகன பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசின் புதிய விதிகள் அமல் படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, மாருதி சுசுகி ஏர்பேக்ஸ் மற்றும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை தங்கள் கார்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.

maruti-offers-airbags-anti-lock-braking-system

வெகுஜன உபயோகத்திற்கான வாகனங்களில், தேர்வு முறையில் இந்த பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வழங்குகிறது. புதிதாக அறிமுக படுத்தப்பட்டுள்ள எஸ்-கிராஸ் மற்றும் வரவிருக்கின்ற பலேனோ ஹேட்ச்பேக்-களில் இந்த ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் பொருத்தப்படுகிறது.

கார்களின் விலையை கருத்தில் கொண்டு, ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே 10 உள்ளிட்ட பட்ஜெட் கார்களின் அடிப்படை வேரியண்ட்களில், இந்த ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் வசதிகள், ஆப்ஷனலாக வழங்கப்பப்பட உள்ளது.

ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய செய்தியாகும். ஆனால், இது போன்ற வசதிகளை, அனைத்து வகையிலான வேரியண்ட்களிலும், ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்களாக வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான விஷயங்களில், புதிய போர்டு ஃபிகோ கார் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. புதிய போர்டு ஃபிகோவின் அனைத்து வேரியண்ட்களிலும் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் வசதி ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சமாக வருகிறது.

இதேபோல், டொயோட்டா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனங்களும் இந்த ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் வசதிகளை ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சமாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்குகின்றனர்.

உலக அளவில், அதிக அளவில் சாலை விபத்துகள் நிகழும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர, அரசு பல கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை கொண்டு வர திட்டமிட்டு வருகின்றது.

2017ம் ஆண்டு அக்டோபர் முதல் அனைத்து ரக கார்களும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்குட்பட்டு தயாரிப்பு மேற்கொள்ள வேண்டும். இந்த கிராஷ் டெஸ்டானது, அராய் எனப்படும் தி ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அஸோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பாக புனேவில் உள்ள சகனில் அமைக்கப்படும் சோதனை மையத்தில் நிகழ்த்தப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Maruti To Offer their Cars with Airbags And Anti-Lock Braking System (ABS). But, Maruti Suzuki is introducing these features like airbags and anti-lock braking system as an optional feature in their mass market models.
Story first published: Tuesday, October 20, 2015, 14:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X