இன்சூரன்ஸ் பணம் டக்குனு உங்க அக்கவுண்டுல வந்து விழணுமா?.. அப்போ விபத்து நடந்த உடனே இத செய்யுங்க பாஸ்!

எப்போது என்ன நடக்கும் என்பதை நம் யாராலும் கணிக்க முடியாது. அத்தகையதே விபத்து. இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அவ்வாறு, பயணங்களின்போது ஏற்படும் திடீர் விபத்துகள் பெருத்த இழப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கார்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தலாம். அந்த சேதங்கள் நம்மால் ஈடுபட்ட கட்ட முடியாததாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்த மாதிரியான சூழலில் நம் கை வசம் காப்பீட்டு திட்டம் இருக்கும் என்றால் அதைக் கையாள்வது மிக சுலபம். ஆம், மிகப் பெரிய இழப்பைகூட காப்பீட்டு திட்டங்களின் மூலம் நம்மால் ஈடுகட்டிக் கொள்ள முடியும். இதனாலேயே இந்திய மோட்டார் வாகன சட்டம் ஒவ்வொரு வாகனங்களுக்கும் காப்பீட்டு திட்டம் அவசியம் என்கின்றது. அதேநேரத்தில், கிளைம்களை இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து பெறுவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.

ஆம், சில நேரங்களில் நம்முடைய கிளைம் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். இதற்கும் வாய்ப்புகள் மிக அதிகம். இத்தகைய நிராகரிப்பு நம்மை மேலும் பல மடங்கு துன்பத்தில் ஆழ்த்த நேரிடும். ஆகையால், இழப்பிற்கான கிளைமிங்கை கோரும்போது சற்று அதிக கவனமாக இருத்தல் வேண்டும். கவனமாக இருப்பது என்பதைக் காட்டிலும் சில நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளுதல் வேண்டும். அந்த நடவடிக்கைகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகத்து வழங்கியிருக்கின்றோம். இதை செய்வதன் வாயிலாக நம்முடைய இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக மாறிடும்.

இன்சூரன்ஸ் நிர்வாகத்திடம் உடனக்குடன் தெரிவித்தல் வேண்டும்:

விபத்து நடைபெற்ற உடன் அதுகுறித்த தகவலை நம்மில் பலர் உறவினருக்கு அல்லது நண்பர்களுக்கே முதலில் தெரிவிக்கின்றோம். இதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால், மிக முக்கியமான ஒன்றான இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விபத்து பற்றி தெரிவிப்பதை அந்த நேரத்தில் மறந்துவிடுகின்றோம். ஓர் பதற்றத்தில் செய்யக் கூடிய இந்த செயலே இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிப்பிற்கான முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது. காலம் தவறிய கிளைம் விண்ணப்பங்களை பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்பதில்லை. ஆகையால், உடனடியாக செல்போன் அழைப்பு, மின்னஞ்சல் அல்லது ஆப் வாயிலாக விபத்து குறித்த தகவலை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துவது மிக மிக நல்லது.

காவல்நிலைய புகார்:

விபத்து நடைபெற்ற பின்னர் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிப்பது எப்படி மிக முக்கியமானதோ, அதேபோல், காவல்நிலையத்திற்கு அதுகுறித்து தெரிவிப்பதும் மிக மிக அவசியமானது. காவல் நிலையத்தில் வழங்கப்படும் எஃப்ஐஆர் காப்பி நம்முடைய கிளைம் கோரிக்கையின்போது சமர்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். ஆகையால், காவல் நிலையத்திலும் விபத்து பற்றிய தகவலை கொடுத்து, அதற்கான எஃப்ஐஆர் காப்பியைப் பெற்றுக் கொள்வது நல்லது. விபத்திற்கு மட்டுமல்ல திருடப்பட்ட வாகனங்களுக்கான இழப்பை பெறுவதற்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படதற்கான சான்று அவசியம்.

வாகனம் சார்ந்த ஆவணங்கள்:

வாகனம் சார்ந்த ஆவணம் அனைத்தையும் கை வசம் வைத்திருக்க வேண்டும். இவற்றை எந்த தடையும் இன்றி வழங்கும் பட்சத்தில் நம்முடைய கிளைமை பெறுவதிலும் எந்த தடையும் இருக்காது. வாகன பதிவு சான்று, ஓட்டுநர் உரிமம், கிளைம் விண்ணப்பங்கள் என அனைத்தும் உடனடியாக சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் ஆகும். இதை சமர்பிப்பதில் ஏதேனும் கால தாமதம் ஏற்பட்டால் கிளைமை பெறுவதிலும் தாமதம் ஏற்படும். ஆகையால், எப்போதும் அனைத்து ஆவணங்களையும் எளிதில் நுகரும் வகையில் வைத்திருப்பது அவசியமாக உள்ளது.

சான்று:

பாதிப்பு ஏற்பட்டிருப்பதை நிரூபிக்க சில சான்றுகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கோருகின்றன. ஆகையால், முடிந்த அளவு விபத்து நடைபெற்ற உடனேயே அந்த இடத்திலேயே செல்போனில் படமாக எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு செய்வதன் வாயிலாக நம்முடைய வாகனம் பாதிப்புக்குள்ளாகி இருப்பதற்கான சான்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மேலும், ன்சூரன்ஸ் நிறுவனம் ஆதாரம் என கேட்கும் போது அதை எளிதில் வழங்கிவிட முடியும். அதேநேரத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் சார்பில் ஓர் நபரை அனுப்பி வாகனத்தின் விபத்து குறித்து ஆய்வை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும் முன் எச்சரிக்கையாக சேதங்களை படமாக எடுத்துக் கொள்வது நல்லது.

விபத்தான வாகனத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்:

விபத்தான வாகனத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது அது மேலும் மேலும் அதிக பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். ஆகையால், விபத்துக்கு பிறக்கு அந்த காரை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, உங்கள் கார் தண்ணீரில் முழுமையாக மூழ்கிவிட்டது என வைத்துக் கொள்வோம். இந்த மாதிரியான ஓர் வாகனத்தை தொடர்ச்சியாக பயன்படுத்த முயற்சிக்கும்போது அதில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கத் தொடங்கும். அதாவது, காருக்குள் புகுந்த நீர் மேலும் சில பாகங்களை மோசமாக பாதிக்கச் செய்யும். அனைத்து விபத்துகளுக்கும் இது பொருந்தும். ஆகையால், கூடுதல் செலவை தவிர்க்க விபத்தைச் சந்தித்த வாகனங்களை பயன்படுத்துவதையும் தவிர்த்தல் வேண்டும்.

உங்க இன்சூரன்ஸ் கம்பெனி கொண்டிருக்கும் விதிமுறைகளை தெரிஞ்சிக்கோங்க:

ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் தங்களுக்கென தனி கொள்கைகளை உருவாக்கி இருக்கின்றன. அந்தவகையில், நீங்கள் காப்பீட்டை வைத்திருக்கும் நிறுவனம் என்ன மாதிரியான கொள்கைத் திட்டங்களை வைத்துள்ளது என்பது தெரிந்துக் கொள்ளுங்கள். கிளைமிங்கிற்காக அந்நிறுவனத்தை நாடும்போது இது உங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் உங்களுக்கு போதுமான வழிக்காட்டுதல் அல்லது உதவியை வழங்காமல் போகலாம். இந்த மாதிரியான நேரத்தில் அவர்களின் விதிகளை தெரிந்துக் கொள்வதனால் நீங்களே உங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும், தாமதமின்றி உங்களின் கிளைமை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Useful tips successful insurance claim
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X