மாருதியின் இந்த காரு இந்தியால ஏன் இவ்ளோ ஃபேமஸா இருக்கு?.. கொடுக்கற காசுக்கு ஒர்த்தானதா?..

இந்தியர்களின் பிரியமான கார் மாடலாக மாருதி சுஸுகி வேகன்ஆர் இருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் கார்கள் விற்பனையில் முதல் இடத்தை பிடிக்கும் அளவிற்கு வேகன்ஆர் கார் இந்தியர்களின் செல்லமான காராக இருக்கிறது. நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் பல கார் மாடல்களை மலிவு விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இருந்தபோதிலும், இந்த காருக்கு மவுசு குறையாமல் அப்படியே இருக்கின்றது. இந்தளவிற்கு பல ஆண்டுகளாக வேகன்ஆர் காருக்கு இந்தியாவில் டிமாண்ட் நிலவ என்ன காரணம் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக இந்தியர்களின் பிரியமான வாகனமாக மாறுவதற்கு வேகன்ஆரில் அப்படி என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

வேகன்ஆர்

பெரிய கேபின்:

வேகன்ஆர் ஓர் ஹேட்ச்பேக் ரக காராகும். இதனை இந்தியர்கள் 'டால் பாய்' என செல்லமாக அழைக்கின்றனர். இதற்கு காரின் உயரமான தோற்றமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. இதுமட்டுமின்றி இந்தியர்கள் தங்களின் ஃபோவரிட் காராக தேர்ந்தெடுக்க இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக காரின் பெரிய ஸ்பேஸ் கொண்ட கேபின் இருக்கின்றது. நீளமான மற்றும் உயரத்தில் மிக தாராளமான காராக வேகன்ஆர் இருக்கின்றது.

ஆனால் அகலம் சற்று குறைவாக இருக்கும். அது பெரும்பாலும் பிரச்னையாக இருந்ததாக அதன் பயனர்கள் பெரியளவில் புகார் தெரிவித்ததில்லை. தற்போது விற்பனையில் இருக்கும் புதிய தலைமுறை வேகன்ஆர் கார் முதன் முதலில் 2019 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் பல மடங்கு அதிக கவர்ச்சியானதாகவும், இடவசதிக் கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய வெர்ஷனில் காணப்பட்ட குறைவான அகல பற்றாக்குறையைக்கூட நிறுவனம் புதிய தலைமுறை வேகன்ஆரில் பூர்த்தி செய்தது.

காரின் பின் புறத்தில் மூன்று பெரியவர்கள்கூட தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். இதேபோல் ஹெட்ரூம் நல்ல அளவில் மிக தாராளமாக இருக்கும். 6 அடி உயரமுள்ளவர்கள்கூட எந்த அசௌகரியமும் இன்றி இந்த காரில் பயணிக்க முடியும். இந்த காரணத்திற்காகவே பலர் இந்த காரை இப்போதும் விருப்பமுடன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த காரின் பூட் ஸ்பேஸும் சற்று பெரியதாக இருக்கின்றது. 341 லிட்டர் இதன் அளவாகும்.

மோட்டார்:

மாருதி சுஸுகி நிறுவனம் வேகன்ஆர் காரை இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 1.2 லிட்டர் அட்வான்ஸ்ட் கே சீரிஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி எஞ்ஜின் தேர்விலும், 1.0 லிட்டர் நெக்ஸ்ட் ஜென் கே சீரிஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி மோட்டார் தேர்விலும் வேகன்ஆர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரை பெட்ரோல் அல்லது சிஎன்ஜி தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். இரண்டும் நல்ல மைலேஜை வழங்கக் கூடியவை ஆகும். பெட்ரோல் வேகன்ஆர் 20 கிமீ முதல் 23 கிமீ வரையிலும், சிஎன்ஜி தேர்வு ஒரு கிலோவிற்கு 24 கிமீ முதல் 25 கிமீ வரையில் மைலேஜ் தரும்.

வேகன்ஆரின் சிறப்பம்சங்கள்:

வேகன்ஆர் காரில் மாருதி சுஸுகி நிறுவனம் பன்முக சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகள் கொண்ட 7 அங்குல தொடுதிரை, ப்ளூடூத் இணைப்பு என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்களும், குறிப்பாக மல்டி மீடியாவைக் கன்ட்ரோல் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, செல்போனுக்கு வரும் அழைப்புகளைக் கன்ட்ரோல் செய்தல், குரல் கட்டளை கன்ட்ரோல் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

மேலும், பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக்குகள், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிரிபியூசன் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், ஏஎம்டி வசதி, ஹில் ஹோல்டு அசிஸ்ட் என பன்முக சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரியான நவீன கால சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டிருப்பதும் இந்தியர்கள் மத்தியில் வேகன்ஆர் கார் மிகவும் புகழ்பெற்றதாக விளங்கக் காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இந்த காரின் டால்பாய் தோற்றமும் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க காரணமாக இருக்கின்றது. இந்த காரில் கவர்ச்சியான தோற்றத்திற்காக டூயல் டோன் நிறம், 14 அங்குல அலாய் வீல் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

வேல்யூ ஃபார் மணி:

நாம் செலவு செய்யும் தொகைக்கு மிகவும் ஒர்த்தான காராக வேகன்ஆர் இருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் ரூ. 5.47 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை தேர்வே ரூ. 7.8 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். நல்ல மைலேஜ், அதிக இட வசதி, நீடித்து உழைக்கும் திறன் என அனைத்திலும் சிறப்புமிக்க காராக இருக்கின்றது. எனவேதான் இந்த காரை நாம் செலவு செய்யும் பணத்திற்கு உகந்த காராக காட்சியளிக்கின்றது.

Most Read Articles

English summary
Why maruti wagonr so popular in india
Story first published: Sunday, November 27, 2022, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X