அசால்ட் ஆறுமுகம் ஆந்திரால கால்தடம் பதிச்சதுபோல, ஹூண்டாயின் இந்த கார் இந்தியால் கால்தடம் பதிக்க போவது உறுதி!

ஹூண்டாய் நிறுவனம் அதன் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் (Hyundai Nexo FCEV)லில் இயங்கும் நெக்ஸோ காரை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக புகழ்பெற்ற ஹூண்டாய் நிறுவனம் அதன் நெக்ஸோ கார் மாடலை இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. தலைநகர் டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த கார் மாடலை ஹூண்டாய் வெளியீடு செய்துள்ளது. இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் காட்சிப்படுத்துவது முதல் முறையல்ல. 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலும் இதே கார் மாடலை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது.

ஹூண்டாய் நெக்ஸோ

இது ஓர் ஃப்யூவல் செல் கார்

இந்த நிலையிலேயே மீண்டும் இந்த காரை ஹூண்டாய் வெளியீடு செய்திருக்கின்றது. ஹூண்டாய் இந்த காரை காட்சிப்படுத்துவதோடு நிறுத்தி கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரை இந்தியாவில் வைத்து நிறுவனம் ஆராய்ச்சியும் செய்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்த வாகனம் இந்திய சாலைகளுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஆய்வையே அது மேற்கொண்டு வருகின்றது. ஹூண்டாய் நெக்ஸோ ஓர் ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.

தற்போது விற்பனையில் இருக்கும் மின்சார கார் மாடல்களைக் காட்டிலும் பன்மடங்கு சிறப்பு வாய்ந்த கார் என இதனை கூறலாம். எலெக்ட்ரிக் கார்களைப் போல் நீண்ட நேரம் இதை சார்ஜ் செய்ய சார்ஜிங் மையங்களில் காத்திருக்க வேண்டாம் என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல், டீசல் கார்களில் எரிபொருளை நிரப்புவது போல் மிகவும் சுலபமாக ஹைட்ரஜனை இந்த காரில் நிரப்பிவிட முடியும்.

ஹூண்டாய் நெக்ஸோ

ரேஞ்ஜ் வேற லெவல்ல கிடைக்கும்

இத்தகைய சூப்பரான காரையே இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் ஆய்வை மேற்கொண்டு வருகின்றது. ஃப்யூவல் செல் கார்கள் எளிதில் சார்ஜாக கூடிய வாகனங்கள் மட்டுமல்ல, அவை, நல்ல ரேஞ்ஜை தரக் கூடியவையும் கூட. ஆமாங்க, ஒரு முறை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை முழுமையாக நிரப்பினாலேயே அந்த கார்களில் ஆயிரம் கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த நெக்ஸோ காரில் ஒரு முறை முழுமையாக ஃப்யூவல் செல்லை நிரப்பினால் 756 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. ரேஞ்ஜ் விஷயத்தில் மட்டுமில்லைங்க இந்த கார் மாடல் பிற விஷயங்களிலும் மிக சிறந்த தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, தொழில்நுட்ப விஷயத்தில் இந்த காரை அடிச்சிக்க வேற ஆளே இல்லை என கூறும் அளவிற்கு ஹூண்டாய் உருவாக்கி இருக்கின்றது.

ஹூண்டாய் நெக்ஸோ

சிறப்பம்சத்திலும் இந்த கார் வேற லெவல்

12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் டிரைவருக்கான திரை உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரின் மற்றுமொரு சிறப்பு என்ன என்றால், காரின் இருக்கைகளில் சைவ ரக லெதரை பயன்படுத்தி இருக்கின்றது. இத்துடன், துணியால் ஆன பைப் லைன்களையும் அது பயன்படுத்தி இருக்கின்றது. இவையும் இந்த காரின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

மேலும், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தின் வாயிலாக பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், லேன் கீப் அசிஸ்ட், ஹைவே டிரைவர் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் ஸ்டேடிக் லோ பீம் அசிஸ்ட் போன்ற அம்சங்களை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான ஃப்யூவல் செல் காரையே இந்தியாவில் மீண்டும ஒரு முறை காட்சிப்படுத்தி இந்தியர்களின் கவனத்தை ஹூண்டாய் ஈர்த்திருக்கின்றது.

மோட்டார் மற்றும் வேக திறன்

இந்த ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் காரில் 95 kW மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 161 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 179 கிமீ ஆகும். இந்த உச்சபட்ச வேகத்தை நிறுவனம் 9.2 செகண்டுகளிலேயே தொட்டுவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Hyundai nexo fcev 2023 auto expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X