ஹூண்டாய் அவ்ரா

ஹூண்டாய் அவ்ரா
Style: செடான்
7.09 - 9.75 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹூண்டாய் அவ்ரா கார் 7 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் அவ்ரா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் அவ்ரா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் அவ்ரா காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் அவ்ரா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் அவ்ரா பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
7,09,012
செடான் | Gearbox
8,05,983
செடான் | Gearbox
8,07,264
செடான் | Gearbox
8,97,460
செடான் | Gearbox
9,53,363
செடான் | Gearbox
9,75,205

ஹூண்டாய் அவ்ரா சிஎன்ஜி மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
செடான் | Gearbox
7,91,804

ஹூண்டாய் அவ்ரா விமர்சனம்

ஹூண்டாய் அவ்ரா வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் டாப்-3 கார் மாடல்களில் ஹூண்டாய் ஆரா காரும் ஒன்று. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் அடிப்படையிலான செடான் கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்களுடன் இந்த கார் முற்றிலும் வேறுபடுத்தப்பட்டுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், க்ரோம் க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மொத்தத்தில் காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் தனித்துவமான டிசைனில் கவர்கிறது ஹூண்டாய் ஆரா.

ஹூண்டாய் அவ்ரா எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஹூண்டாய் ஆரா காரில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் டீசல் எரிபொருள் வகை தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இரண்டு பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வும் உள்ளது. இதில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகிறது. இதே பெட்ரோல் எஞ்சின் சிஎன்ஜி எரிபொருள் வகையிலும் கிடைக்கிறது.

இந்த காரில் வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஹூண்டாய் அவ்ரா மைலேஜ்

ஹூண்டாய் ஆரா காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும், 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் டீசல் மாடல் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஹூண்டாய் அவ்ரா முக்கிய அம்சங்கள்

புதிய ஹூண்டாய் ஆரா காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கருப்பு மற்றும் பழுப்பு வண்ண இன்டீரியர் தீம், 8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ஹூண்டாய் அவ்ரா தீர்ப்பு

புதிய ஹூண்டாய் ஆரா கார் பிரிமீயம் வசதிகளுடன் அதிக எஞ்சின் தேர்வுகளுடன் வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது. காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் தனித்துவமான டிசைனில் அதிக வசதிகளுடன் கூடிய காரை வாங்க விரும்புவோருக்கு இந்த கார் சிறந்த தேர்வாக அமையும். பெட்ரோல், சிஎன்ஜி, டீசல் எரிபொருள் தேர்வுகளில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் இதற்கு வலு சேர்க்கிறது.

வண்ணங்கள்


Fiery Red
Starry Night
Teal Blue
Titan Grey
Typhoon Silver
Atlas White

ஹூண்டாய் அவ்ரா படங்கள்

ஹூண்டாய் அவ்ரா Q & A

புதிய ஹூண்டாய் ஆரா காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

ஹூண்டாய் ஆரா கார் இ, எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
ஹூண்டாய் ஆரா காரில் எத்தனை வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன?

ஃபியரி ரெட், போலார் ஒயிட், தைபூன் சில்வர், டைட்டன் க்ரே, ஆல்ஃபா புளூ, விண்டேஜ் பிரவுன் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+