ஃபோக்ஸ்வேகன் டைகுன்

ஃபோக்ஸ்வேகன் டைகுன்
Style: எஸ்யூவி
13.51 - 22.42 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் 7 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
13,50,808
எஸ்யூவி | Gearbox
14,87,446
எஸ்யூவி | Gearbox
16,45,277
எஸ்யூவி | Gearbox
16,90,337
எஸ்யூவி | Gearbox
18,94,170
எஸ்யூவி | Gearbox
21,10,000
எஸ்யூவி | Gearbox
22,41,942

ஃபோக்ஸ்வேகன் டைகுன் விமர்சனம்

ஃபோக்ஸ்வேகன் டைகுன் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி களமிறக்கப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டிசைன் பாரம்பரியத்தை பரைசாற்றும் விதத்தில், மிக நேர்த்தியான வடிவமைப்புடன் டைகுன் எஸ்யூவி செதுக்கப்பட்டு இருக்கிறது. இரட்டை பட்டைகளுடன் க்ரோம் வேலைப்பாடுகள் கொண்ட அழகிய முகப்பு க்ரில், எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், பிரஷ்டு அலுமினியம் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், எல்இடி டெயில் லைட்டுகள், ரூஃப் ஸ்பாய்லர், ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவற்றுடன் மிகச் சிறந்த வடிவமைப்புடன் வசீகரிக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஞ்சின் மற்றும் செயல்திறன்

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் என இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 115 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இதுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் மைலேஜ்

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் 1.0 லிட்டர் மேனுவல் மாடல் லிட்டருக்கு 18.1 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.44 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மறுபுறத்தில் 1.5 லிட்டர் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 18.47 கிமீ மைலேஜையும், டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.88 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் முக்கிய அம்சங்கள்

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை வயர்லெஸ் முறையில் இணைக்கும் வசதி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், 8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வென்டிலேட்டட் வசதியுடன் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு நவீன வதிகளை பெற்றுள்ளது.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், மல்டி கொலிஷன் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் தீர்ப்பு

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக வந்துள்ளது. நேர்த்தியான டிசைன், அதிக வசதிகள், சரியான விலையில் கிடைப்பதுடன் சிறந்த கட்டமைப்பு கொண்ட மாடலாகவும் கருத முடியும். ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு சிறந்த மாற்றுத் தேர்வாக கூறலாம்.

வண்ணங்கள்


Candy White
Reflex Silver
Carbon Steel Grey
Rising Blue Metallic
Lava Blue
Wild Cherry Red

ஃபோக்ஸ்வேகன் டைகுன் படங்கள்

ஃபோக்ஸ்வேகன் டைகுன் Q & A

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

கம்ஃபோர்ட்லைன், ஹை லைன், டாப் லைன் மற்றும் ஜிடி ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+